Close

Collector- School Students Corona Relief

Publish Date : 25/06/2021
.

செ.வெ.எண்:-26/2021

நாள்:21.06.2021

திண்டுக்கல் மாவட்டம்

பெற்றோர்களை இழந்த பள்ளி மாணவர்களுக்கு நிவாரண பொருட்கள் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.விசாகன்,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.

திண்டுக்கல் மாநாகராட்சி தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் பயிலும், பெற்றோர்களை இழந்த மாணவர்களுக்கு கொரோனா ஊரடங்குகால நிவாரணப் பொருட்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.விசாகன்,இ.ஆ.ப., அவர்கள் இன்று(21.06.2021) வழங்கினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. கொரோனா ஊரடங்கு காலங்களில் அனைத்து தரப்பு மக்களுக்கும், வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடாது என்பதனை கருத்தில் கொண்டு, அனைத்து நியாயவிலைக்கடைகளிலும், நிவாரணத்தொகை மற்றும் நிவாரணப்பொருட்களை வழங்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டு வழங்கப்பட்டு வருகிறது.

கொரோனா ஊரடங்கு காலங்களில், அரசோடு இணைந்து தன்னார்வலர்களும் பல்வேறு நிவாரண பொருட்களையும் பொதுமக்களுக்கு வழங்கி வருகிறார்கள். அதனடிப்படையில் தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் பயிலும் பெற்றோர்களை இழந்த 300 மாணவர்களுக்கு அரிசி, கோதுமை, சேமியா, கிருமிநாசினி, கபசுரகுடிநீர், முககவசம் உள்ளிட்ட ரூ.1000 மதிப்பிலான நிவாரண பொருட்கள் அடங்கிய தொகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.விசாகன்,இ.ஆ.ப., அவர்கள் மாணவர்களுக்கு வழங்கினார்.

பெற்றோர்களை இழந்த மாணவர்களுக்கு ரூ.8 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் வழங்கிய தூய மரியன்னை பள்ளி நிவாகத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.விசாகன்,இ.ஆ.ப., அவர்கள் பாராட்டுகளை தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், தூய மரியன்னை பள்ளி தாளாளர் திரு.அருள்தாஸ் மற்றும் பள்ளி நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.