Close

Collector – special camp

Publish Date : 25/10/2021

செ.வெ.எண்:-50/2021

நாள்:23.10.2021

விவசாயிகள் மற்றும் நில உரிமையாளர்களின் பட்டா தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில், ஒவ்வொரு வருவாய் வட்டத்திலும் உள்ள ஒவ்வொரு வருவாய் கிராமங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது-மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

ஒவ்வொரு கிராமத்திலும், விவசாயிகள் மற்றும் நில உரிமையாளர்களின் பட்டா தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில், அரசாணை (MS) எண். 644 வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, நில அளவை மற்றும் நிலவரித் திட்ட அலகு (SS II)(2) பிரிவு, நாள்: 11.10.2021-ன்படி, ஒவ்வொரு வருவாய் வட்டத்திலும் உள்ள ஒவ்வொரு வருவாய் கிராமங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, 2022-ஆம் ஆண்டு பொங்கல் திருநாளுக்குள் அனைத்து கிராம மக்களும் பயன்பெறும் வகையில், கணினி சிட்டாவில் தவறான புல எண்/ தவறான புல எண் உட்பிரிவு, பரப்புப்பிழை, நிலவுடமைதாரர் பெயர் அல்லது தகப்பனார்/ காப்பாளர் பெயர் திருத்தம், உறவு முறை திருத்தம், மேற்குறிப்பிட்ட விபரங்கள் காலியாக குறிப்பிடப்பட்ட இனங்கள், பரப்பளவு/ பட்டாதாரர் பெயர் திருத்தம் குறித்த இனங்களில் ஒட்டியுள்ள நிலவுடமைதாரர் பெயர் தாக்கல் ஆகியுள்ள இனங்கள் போன்ற எளிமையான பிழைகளை சரி செய்ய சிறப்பு முகாமில் மனுக்கள் பெற்று, அன்றைய தினமே ஆவணங்களின் அடிப்படையில் தீர்வு செய்யப்படவுள்ளது.

இச்சிறப்பு முகாம் திட்டத்தின்கீழ், திண்டுக்கல் மாவட்டத்தில் ஒவ்வொரு வட்டத்திலும், கிராம வாரியாக சிறப்பு முகாம் நடைபெறும் நாட்கள் அனைத்து வட்டாட்சியர் அலுவலங்கள்/ வட்டார வளர்ச்சி அலுவலகங்கள்/ வருவாய் ஆய்வாளர் குடியிருப்பு/ கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் மற்றும் கிராம ஊராட்சி அலுவலகங்களில் அறிவிப்பு பலகையில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.

மேற்படி அலுவலகங்களில், விவசாய பெருமக்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது கிராமங்களில் சிறப்பு முகாம் நடைபெறும் நாளினை தெரிந்து கொண்டு, தங்களது இணையதள கணினி பட்டாவில் எளிமையான பிழைகளை திருத்தம் செய்துகொள்ள தேவைப்படும் ஆவணங்களுடன், கோவிட்-19 வழிகாட்டி நடைமுறைகளின்படி முக கவசம் அணிந்து, உரிய சமூக இடைவெளியை பின்பற்றி, மனு செய்து தங்களது இணையதள கணினி பட்டாவிலுள்ள எளிமையான பிழைகளை திருத்தம் செய்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.