Close

Collector Special GDP

Publish Date : 18/07/2019
1

3 2

செ.வெ.எண்:-53/2019 நாள்:- 18.07.2019

திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் மேற்கு, திண்டுக்கல் கிழக்கு, ஆத்தூர், நிலக்கோட்டை மற்றும் நத்தம் வட்டங்களைச் சேர்ந்த பொதுமக்களின் நிலுவையில் உள்ள மனுக்களை விசாரித்து தீர்வு காணும் சிறப்பு முகாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.விஜயலட்சுமி.இ.ஆ.ப அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் உள்ள கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று (18.07.2019) நிலுவையில் உள்ள மனுக்களை விசாரித்து தீர்வு காணும் சிறப்பு முகாம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சி;த்தலைவர் திருமதி.மு.விஜயலட்சுமி.இ.ஆ.ப அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த சிறப்பு முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-

தமிழ்நாடு அரசின் அரசாணையின்படி, பிரதி வாரம் திங்கள் கிழமை தோறும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்களின் மீது நடவடிக்கை மேற்கொண்டு, உடனடியாக தீர்வு காணப்படுகிறது. இவ்வாறு அனுப்பப்படும் மனுக்கள் மற்றும் நீண்ட காலமாக தீர்வு காணப்படாத மனுக்கள் மற்றும் திரும்ப திரும்ப அனுப்பப்படும் மனுக்கள் குறித்து, இறுதியாக தீர்வு காணும் பொருட்டு, இன்றைய தினம் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.

இன்றைய தினம், திண்டுக்கல் மேற்கு, திண்டுக்கல் கிழக்கு, ஆத்தூர், நிலக்கோட்டை மற்றும் நத்தம் வட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் இந்த சிறப்பு முகாமில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை குறித்து மனுக்கள் அளித்து நீண்ட நாட்களாக தீர்வு காணப்படாமல் நிலுவையிலுள்ள பட்டா மாறுதல், வீட்டுமனைப் பட்டா, வாரிசு சான்று, முதியோர் உதவித் தொகை, ஆதரவற்ற விதவைச் சான்று, நிலம் எடுப்பு இழப்பீட்டுத் தொகை மற்றும் வங்கி கடனுதவி பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து 350-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்கள் மீது சம்மந்தப்பட்;ட அலுவலர்கள் ஓரிரு நாட்களில் நடவடிக்கை மேற்கொண்டு உரிய பதிலினை மனுதார்களுக்கு உடனடியாக அளிக்குமாறு சம்மந்தபட்ட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.விஜயலட்சுமி.இ.ஆ.ப அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

மேலும், வருவாய்த்துறையின் மூலம் 6 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா, சமூகப்பாதுகாப்புத்திட்டத்தின்கீழ்; 27 பயனாளிகளுக்கு மாதம் தோறும் ரூ.1000ஃ-க்கான மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை ஆணையினையும், கடந்த (15.07.2019) திங்கள் கிழமை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு கொடுத்த முதியோருக்கு, அவர் மனுவை பரிசீலினை செய்து, நடவடிக்கை மேற்கொண்டு உடனடியாக மாதாந்திர முதியோர் உதவித்தொகைக்கான ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.விஜயலட்சுமி.இ.ஆ.ப அவர்கள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், திண்டுக்கல் கோட்டாட்சியர் திருமதி.கு.உஷா மற்றும் வட்டாட்சியர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்