Close

Collector – Special Grievance Palani

Publish Date : 28/08/2019
1

செ.வெ.எண்:- 67/2019 நாள்:-27.08.2019

திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்வு திட்டத்தின்; கீழ் பழனி வட்டத்தில் நடைபெற்ற சிறப்பு முகாமில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.விஜயலட்சுமி. இ.ஆ.ப.,அவர்கள் பெற்றார்.

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், மற்றும் அனைத்து கிராமங்களிலும் ‘மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்வு திட்டம்” 31.08.2019க்குள் நடத்தப்பட்டு, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, அம்மனுக்களின் மீது தொடர்புடைய அலுவலர்கள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு, விரைந்து தீர்வு காணுமாறு அறிவுறுத்தபட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் மாண்புமிகு வனத்துறை அமைச்சர் அவர்கள் “மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்வு திட்டத்தினை மாவட்டத்தில் கடந்த 23.08.2019 அன்று தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து, பழனி சார் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (27.08.2019) மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்வு திட்டத்தின்; கீழ் நடைபெற்ற சிறப்பு முகாமில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.விஜயலட்சுமி. இ.ஆ.ப., அவர்கள் பெற்று தெரிவித்ததாவது:-

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகளிலுள்ள அனைத்து வார்டுகளிலும் மற்றும் அனைத்து கிராமங்களிலும் 26.08.2019 திங்கள் கிழமை முதல் துவங்கப்பட்டு 30.08.2019 வெள்ளிக்கிழமை வரை அனைத்து வட்டங்களிலும் உள்ள கிராம ஊராட்சி மன்றம் / பேரூராட்சி மற்றும் நகராட்சி அலுவலங்களில் காலை 10.00 மணி முதல் துணை வட்டாட்சியர் ஃ துணை வட்டார வளர்ச்சி அலுவலர் / உதவி வேளாண்மை அலுவலர் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் குழு நேரடியாக பொதுமக்களிடம் மனுக்களை பெற உள்ளனர்.

பொதுமக்கள் தங்களுடைய தேவைகளான முதியோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், வீட்டுமனைப் பட்டா, உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு, இறப்பு சான்றிதழ், சாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், குடிநீர் வசதி, சாலை வசதி, மின்விளக்கு வசதி, குடும்ப அட்டை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை பொதுமக்கள், பல்வேறு பகுதிகளிலிருந்து பேருந்தின் மூலம் வட்டாட்சியர், கோட்டாட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று மனுக்களை வழங்க, ஏற்படும் நேரம், செலவு, வேலை இழப்பு உள்ளிட்ட சிரமத்தை தவிர்க்கும் பொருட்டு, வருவாய்த்துறையின் மூலம் அலுவலர்கள் பொதுமக்களின் பகுதிகளுக்கு நேரடியாக சென்று மனுக்களைப் பெற அரசால் வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே, பொது மக்கள் தங்கள் பகுதிகளில் மனுக்கள் பெறும் அலுவலகங்களில்; மேற்படி அரசு அலுவலர்களிடம் மனுக்களை நேரடியாக அளித்து, ஒரு மாதகாலத்திற்குள் பொதுமக்களால் கொடுக்கப்பட்ட மனுக்களுக்கு அரசு விதிகளுக்குட்பட்டு தீர்வு செய்து, உரிய நபர்களுக்கு இத்திட்டத்தின் மூலம் உரிய பலன்கள் வழங்கப்படும். எனவே பொதுமக்கள் இதனை பயன்படுத்தி, மேற்படி திட்டத்தின் மூலம் மனுக்களை அளித்து பயன்பெறலாம்;. என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.விஜயலட்சுமி. இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

மேலும், இன்றைய தினம் பழனி கோட்ட அளவில் நடைபெற்ற ‘மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்வு திட்டம் சிறப்பு முகாமில் பழனி, ஒட்டன்சத்திரம், வேடசந்தூர் மற்றும் குஜிலியம்பாறை பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது. மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காண சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.

இச்சிறப்பு முகாமில், பழனி சார் ஆட்சியர் டாக்டர்.சு.உமா, வட்டாட்சியர் திரு.பழனிச்சாமி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்