Collector -Sports Practice permission
செ.வெ.எண்:-26/2020
நாள்:28.07.2020
திண்டுக்கல் மாவட்டம்
சர்வதேச மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்பவர்கள் திண்டுக்கல் மாவட்ட விளையாட்டரங்கத்தில் விதிமுறைகளுக்குட்பட்டு பயிற்சி மேற்கொள்ளலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
சர்வதேச மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்பவர்கள் திண்டுக்கல் மாவட்ட விளையாட்டரங்கத்தில் பயிற்சி மேற்கொண்டு, தேசிய மற்றும் சர்வதேச அளவில் போட்டிகளில் கலந்து பதக்கங்கள் பெற்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்கும் பொருட்டு அரசு விதிமுறைகளுடன் ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி,தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், திண்டுக்கல் மாவட்ட விளையாட்டரங்கத்தில் விதிமுறைகளின்படி பயிற்சி மேற்கொள்ள அரசு அனுமதி வழங்கியுள்ளது.
சர்வதேச மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க உள்ளவர்கள் மட்டும்; பயிற்சி மேற்கொள்ள அனுமதிக்கப்படுவர். 15 வயதிற்கு மேற்பட்ட 50 வயதிற்குட்பட்ட வீரர், வீராங்கனைகள் பயிற்சி மேற்கொள்ள அனுமதிக்கப்படுவர். பயிற்சி மேற்கொள்ள வருபவர்கள் கட்டாயம் முகக்கவசம், கையுறை அணிந்திருக்க வேண்டும். பயிற்சி மேற்கொள்ள வருபவர்கள் விளையாட்டு உபகரணங்களை தாங்களே கொண்டு வருதல் வேண்டும். ஒருவர் பயன்படுத்திய விளையாட்டு உபகரணங்களை மற்றவர்கள் பயன்படுத்தக் கூடாது. பயிற்சி மேற்கொள்பவர்கள் கட்டாயம் ஆரோக்கியசேது செயலியை தங்கள் கைப்பேசியில் பதிவிறக்கம் செய்திருக்க வேண்டும். உடற்பயிற்சி கூடம் மற்றும் நீச்சல் குளங்கள் மறு உத்தரவு வரும் வரை திறக்க அனுமதி இல்லை.
பயிற்சி மேற்கொள்பவர்கள், திண்டுக்கல் மாவட்ட விளையாட்டரங்கத்தில் சம்மந்தப்பட்ட படிவத்தை பெற்று> பூர்த்தி செய்து சமர்ப்பித்து அனுமதி பெற்று பயிற்சி மேற்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.