Close

Collector – TAHDCO – Training

Publish Date : 25/08/2021

செ.வெ.எண்:-50/2021

நாள்:-23.08.2021

திண்டுக்கல் மாவட்டம்

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ / மாணவியர்களுக்கு குறுகிய கால திறன் மேம்பாட்டு பயிற்சிகள் கட்டணமில்லாமல் அளிக்கப்படுகிறது -மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன் இ.ஆ.ப அவர்கள் தகவல்.

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோவின்) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ / மாணவியர்களுக்கு குறுகிய கால (ஒன்று முதல் ஆறு மாதம் வரையிலான) திறன் மேம்பாட்டு பயிற்சிகள் கட்டணமில்லாமல் அளிக்கப்படுகிறது.

மாணாக்கர்களின் தகுதிக்கேற்ப ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நல மாணவ / மாணவியர்கள் தங்களுக்கு தேவைப்படும் தொழில் நுட்ப பயிற்சியினை மேற்கொள்ள, தாட்கோவின் http://training.tahdco.com என்ற இணையதளத்தின் வழியே பதிவேற்றம் செய்து தாங்கள் விரும்பும் பயிற்சியினை மேற்கொண்டு இத்திட்டத்தினை கட்டணமின்றி பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும், மாணவ/மாணவியர்களுக்கு போக்குவரத்து படிகள் வழங்கப்படும். இப்பயிற்சியின் முடிவில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு SCVT / SSC சான்றிதழ்கள் வழங்கப்பட்டு பல்வேறு தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பிற்கு வழிவகை செய்யப்படும்.

திறன் மேம்பாட்டு பயிற்சி முடித்து சான்று பெற்ற பயிற்சியாளர்கள் மாவட்ட மேலாளரிடம் தாங்கள் பயின்ற பயிற்சிக்கு தொடர்பான தொழில் தொடங்கிட http://tahdco.application.com தாட்கோ இணையதளத்தில் விண்ணப்பத்தினை பதிவு செய்து தொழில் முனைவோர் திட்டம் (EDP) மற்றும் இளைஞர்களுக்கான சுயவேலை வாய்ப்பு (SEPY) திட்டத்தின் கீழ் பயன்பெறலாம். அரசு மானியத்துடன் கூடிய வங்கி கடன் வழங்க ஆவன செய்யப்படும்.

இந்த வாய்ப்பினை ஆதிதிராவிட/பழங்குடியின மாணவ / மாணவியர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன் இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.