Collector-Third gender special camp for smart card
செ.வெ.எண்:-17/2021
நாள்:07.10.2021
திருநங்கைகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்குவதற்கான சிறப்பு முகாம் 09.10.2021 அன்று வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலக வளாகங்களில் அமைந்துள்ள குடிமைப்பொருள் தனி வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் வட்ட வழங்கல் அலுவலர் அலுவலகங்களில் திருநங்கைகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்குவதற்கான சிறப்பு முகாம் 09.10.2021(சனிக்கிழமை) அன்று நடைபெறவுள்ளது.
குடும்ப அட்டை இல்லாத திருநங்கைகள் தங்கள் புகைப்படம், ஆதார் அட்டை, நலவாரிய உறுப்பினர் அட்டை மற்றும் ஏதேனும் ஒரு இருப்பிட ஆதாரங்களுடன் 09.10.2021 அன்று வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு சென்று புதிய மின்னணு குடும்ப அட்டை பெற விண்ணப்பித்து, புதிய மின்னணு குடும்ப அட்டைகள் பெற்று பயன்பெறலாம் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள், தெரிவித்துள்ளார்கள்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.