Close

Consumer Day

Publish Date : 01/06/2022
.

செ.வெ.எண்:-63/2022

நாள்:31.05.2022

திண்டுக்கல் மாவட்டம்

மண்டல அளவிலான தேசிய நுகர்வோர் தினம் மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தினவிழா – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று(31.05.2022) மண்டல அளவிலான தேசிய நுகர்வோர் தினம் மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தினவிழா- 2022, மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

நுகர்வோரிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நுகர்வோர் தொடர்பாக நடைபெற்ற பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டி உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-

நுகர்வோர் நலனுக்காக சட்டங்கள் உள்ளன. அந்த சட்டங்களை அனைவரும் அறிந்துகொள்வது நல்லது. எந்தவொரு விதத்திலும் பாதிக்கப்படும் நுகர்வோருக்கு, தகுந்த தீர்வு நுகர்வோர் நீதிமன்றம் மூலம் பெற முடியும். சட்டங்களை அறிந்து, நுகர்வோர் உரிமைகளை கோர வேண்டும். நுகர்வோர் உரிமைகளை கோரும்போது, நமது கடமையில் நாம் சரியாக இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி வே.லதா, திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.கு.பிரேம்குமார், தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையாளர் திருமதி ஜீ.சிவசிந்து, உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை மாவட்ட நியமன அலுவலர் திரு.கா.சிவராமபாண்டியன், தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் திரு.சுப.சுப்பிரமணியம், தனிவட்டாட்சியர் திரு.அபுரிஸ்வான் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.