Control room inspection (election)

Publish Date : 20/03/2019
123

3 1

செ.வெ.எண்:- 29/2019 நாள்:- 20.03.2019
திண்டுக்கல் மாவட்டம்

தேர்தல் கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகள் குறித்து, மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.டி.ஜி.வினய்.இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, 22.திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதிக்கான பொதுத்தேர்தல் மற்றும் 130.நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் ஆகிய தேர்தல்கள் நடைபெறவிருப்பதை முன்னிட்டு, மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டு, தேர்தல் பணிகள் நடைபெற்று வருகின்றன.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளுக்கும் மொத்தம் 24 பறக்கும்படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதில், ஒருகுழுவிற்கு ஒரு ஊரக வளர்ச்சித்துறை அலுவலரும், 3 காவல் துறையினரும், 1 வீடியோ ஒளிப்பதிவாளர் என மொத்தம் 5 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் நிலைகாண்காணிப்புக் குழுவில், திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளை கண்காணிக்க மொத்தம் 24 நிலைகண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதில் ஒருகுழுவிற்கு 1 ஊரகவளர்ச்சித்துறை அலுவலரும், 3 காவல் துறையினரும், 1 வீடியோ ஒளிப்பதிவாளர் என மொத்தம் 5 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை கண்காணிக்கும் வகையில் பறக்கும்படை, நிலையான கண்காணிப்புகுழு, வீடியோ பார்வைக்குழு, வீடியோ கூர்ந்தாய்வுக்குழு, கணக்குக்குழுவில் என தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்த குழுக்கள் தேர்தல் பணியில் பயன்படுத்துவதற்காக மொத்தம் 16 வாகனங்களுக்கு ஜி.பி.எஸ்.கருவி பொருத்தப்பட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையின் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மேலும், தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் பொதுமக்கள் எந்நேரமும் தொடர்பு கொள்வதற்கு ஏதுவாக, கட்டணமில்லா தொலைபேசி எண் 18004255965 மற்றும் இந்திய தேர்தல் ஆணையத்தினால் நிறுவப்பட்டுள்ள 1950 கட்டமில்லா தொலைபேசி எண்கள் மூலம் வரப்பெற்ற புகார்கள் மற்றும் பொதுமக்களுக்கு தேர்தல் குறித்த சந்தேகங்கள் ஆகியவைகள் குறித்தும், தேர்தல் கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகள் குறித்தும் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.டி.ஜி.வினய்.இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.