Close

Copra procurement

Publish Date : 17/07/2019
1

2

செ.வெ.எண்:-50/2019 நாள்:- 17.07.2019

திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் மூலம் தேங்காய் கொப்பரை கொள்முதல்.

இடைத்தரகர்கள் யாருமில்லாமல் விவசாயிகள் நேரடியாக தங்களது தேங்காய் கொப்பரையை சரியான விலைக்கு விற்பனை செய்ய அரசால் வழிவகை செய்யப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.விஜயலட்சுமி.இ.ஆ.ப அவர்கள் தகவல்.

திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தில் செயல்பட்டுவரும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விவசாயிகளிடமிருந்து நேரடியாக தேங்காய் கொப்பரை கொள்முதல் செய்யும் நிகழ்வினை திண்டுக்கல் மாவட்ட ஆட்சி;த்தலைவர் திருமதி.மு.விஜயலட்சுமி.இ.ஆ.ப அவர்கள் தொடங்கி வைத்து தெரிவித்ததாவது:-

தமிழ்நாட்டில் விவசாய உற்பத்தியை அதிகரிக்கவும், விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கு நல்ல விலை பெறுவதற்கும் தமிழ்நாடு அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. பயறு வகைகளின் விலை குறைந்த பட்ச ஆதார விலைக்கு கீழ் சென்றபோது, விலை ஆதரவு திட்டத்தின் கீழ் பயறு வகைகள் கடந்த ராபி பருவத்தில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டதால் பயறு சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு இலாபகரமான விலை கிடைத்தது. அதன் தொடர்ச்சியாக காரிப் பருவத்திலும் விலை ஆதார திட்டத்pன் கீழ் விவசாய விளைபொருட்களை ஒழுங்குமுறைவிற்பனைக்கூடங்கள் மூலம் கொள்முதல் செய்வதற்கு முடிவு எடுக்கப்பட்டது.

தற்போது தேங்காய் கொப்பரைகளின் விலை குறைந்துள்ளதால் தென்னை விவசாயிகளுக்கு உதவும் வகையில் விலை ஆதரவு திட்டத்தில் குறைபட்ச ஆதார விலையில் தேங்காய் கொப்பரையினை கொள்முதல் செய்ய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி தமிழகத்தில் 20 மாவட்டங்களில் 50,000 மெ.டன் கொப்பரையை குறைந்தபட்ச ஆதார விலையில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் மூலம் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் என அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் தென்னையானது 30,498 ஹெக்டேர் அளவில் பரியிடப்பட்டு வருகிறது. அதில் 3,58,923.625 இலட்சம் மெ.டன் தேங்காய் உற்பத்தி செய்யப்பட்டு 3,40,977 இலட்சம் மெ.டன் விற்பனை உபரி ஏற்படுகிறது. தற்போது தேங்காய் பருப்பின் வெளிச்சந்தையின் விலையானது கிலோ ஒன்றுக்கு தொகை ரூ.82.00 முதல் ரூ.85.00 வரை நிலவிவருகிறது. தற்போது விலை ஆதரவு திட்டத்தில் மத்திய அரசின் குறைந்தபட்ச ஆதார விலையானது அரவை கொப்பரைக்கு கிலோ ஒன்றுக்கு ரூ.95.21-ம், பந்து கொப்பரைக்கு கிலோ ஒன்றுக்கு 99.20-ம், நிர்ணயம் செய்யப்பட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பழனி, நத்தம் மற்றும் வத்தலகுண்டு ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் கொள்முதல் மையங்கள் ஜுலை – 2019 முதல் ஆறு மாதங்களுக்கு செயல்படும் என அரசால் உத்தரவிடப்பட்டுள்ளது.

எனவே, கொள்முதலுக்கு தேங்காய் கொப்பரை கொண்டு வரும் விவசாயிகள் நில உரிமைக்கான அசல் சிட்டா மற்றும் அடங்கலும், ஆதார் மற்றும் வங்கி கணக்கு புத்தகத்தின் நகலும் கொள்முதல் மையங்களில் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் கொண்டு வரக்கூடிய தேங்காய் கொப்பரையின் ஈரப்பதமானது 6 சதவீதங்களுக்கு குறைவாகவும், பூஞ்சானம் மற்றும் சுருக்கம் நிறைந்த கொப்பரைகள் எண்ணிக்கையில் 10 சதவீதங்களுக்கு குறைவாகவும், அயல் பொருட்கள் மற்றும் சில்லுகள் 10 சதவீதத்திற்கு குறைவாகவும் இருக்க வேண்டும் என தரக்குறியீடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.மேற்சொன்ன காலத்தில் ஒரு விவசாயிடமிருந்து ஒரு ஏக்கருக்கு அதிகபட்சமாக 191 கிலோ மட்டும் கொள்முதல் செய்யப்படும்.

இத்திட்டத்தின் மூலம் இடைத்தரகர்கள் யாருமில்லாமல் தென்னை விவசாயிகள் நேரடியாக தங்களது விளைபொருட்களை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் சரியான விலைக்கு விற்பனை செய்ய அரசால் வழிவகை செய்யப்பட்டு விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்பாடு அடைய செய்துள்ளது. இதனை விவசாயிகள் நல்லமுறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்ச்சியில், உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு.மதுபாலன்.இ.ஆ.ப,, ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் செயலாளர் திரு.சந்திரசேகர், நத்தம் பேரூராட்சி செயல் அலுவலர் திரு.சரவணன், வட்டாட்சியர் திரு.ராதாகிருஷ்ணன் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்