Close

Corona – 24 hours Control Room

Publish Date : 08/04/2020

செ.வெ.எண்:-20/2020 நாள்:08.04.2020
திண்டுக்கல் மாவட்டம்

கொரோனா வைரஸ் தொற்று குறித்த சந்தேகங்கள், மருத்துவ சிகிச்சை தொடர்பான புகார்களை தெரிவிக்க திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேர பேரிடர் மேலாண்மைக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

————————————————————————————————————————————-

திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் பரவலை தடுக்கும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் அலுவலர்களால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திண்டுக்கல் மேற்கு மற்றும் கிழக்கு வட்டங்களில் உள்ள பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று குறித்த சந்தேகங்கள் மருத்துவ சிகிச்சை தொடர்பான புகார்களை தெரிவிக்க திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேர பேரிடர் மேலாண்மைக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு;ளளது. இந்த கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொள்ள 0451-2427304 என்ற தொலைபேசி எண்ணிலும், 9445000579 மற்றும் 9942828331 என்ற அலைபேசி எண்களிலும் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.

மேலும் துணை சுகாதார இயக்குநரை 9442552692 என்ற அலைபேசி எண்ணிலும், நகர சுகாதார அலுவலரை 9994021902 என்ற அலைபேசி எண்ணிலும், திண்டுக்கல் வட்டார மருத்துவ அலுவலரை 9842123696 என்ற அலைபேசி எண்ணிலும், ரெட்டியார்சத்திரம் வட்டார மருத்துவ அலுவலரை 8754667615 என்ற அலைபேசி எண்ணிலும், சாணார்பட்டி வட்டார மருத்துவ அலுவலரை 9486935762 என்ற அலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

—————————————————————————————————————————————————————————————-
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.
—————————————————————————————————————————————————————————————-