Close

Corona Precaution Awarness

Publish Date : 03/04/2020
aware-1

செ.வெ.எண்:-08:2020 நாள்:03.04.2020

திண்டுக்கல் மாவட்டம்

கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்கள் சமூக விலகலை கடைப்பிடிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்

————————————————————————————————————————————-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகள் போர்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பொதுமக்களுக்கு 144 தடை உத்தரவின் காரணமாக அத்தியாவசிய பொருட்கள் எளிதில் கிடைக்கும் வகையிலும், காய் கறி கடைகள் மற்றும் மளிகை கடைகள் பொருட்கள் வாங்கும் போது நோய் தொற்று பரவாமல் தடுத்திடும் பொருட்டு சமூக இடைவெளி ஏற்படுத்தப்பட்டு பொருட்கள் விற்பனை செய்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அந்தவகையில், வேடசந்தூர் ஊராட்சி ஒன்றியம், பாலப்பட்டியில் உள்ள பொது குடிநீர் குழாயில் பொதுமக்கள் சமூக விலகலை கடைப்பிடித்து குடிநீரை குடங்களில் பிடித்து கொண்டு செல்லும் வகையில் அங்கு 1 மீட்டர் தூரம் இடைவெளிவிட்டு கட்டங்கள் வரையப்பட்டு, பொதுமக்கள் சமூக விலகலை கடைப்பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல், திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டியில் உள்ள பொது குடிநீர் குழாயில் பொதுமக்கள் சமூக விலகலை கடைப்பிடித்து குடிநீர் பிடித்துச் செல்லும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் மேட்டுப்பட்டியில், நியாயவிலைக் கடையின் மூலமாக தமிழக அரசு அறிவித்துள்ள கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நிவாரணத்தொகை ரூ.1000 மற்றும் நிவாரணப் பொருட்கள் பொதுமக்களின் வீடுகளுக்கு கொண்டு சென்று விநியோகிக்கப்படுகிறது.

பொதுமக்களும் மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

—————————————————————————————————————————————————————————————-
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.
—————————————————————————————————————————————————————————————-