Close

Covid 19 and New Year Restriction

Publish Date : 31/12/2021

செ.வெ.எண்:-77/2021

நாள்:31.12.2021

கொரோனா நோய்த்தொற்று பரவும் அபாயம் இருப்பதால், ஆங்கிலப் புத்தாண்டு விழா கொண்டாட்டங்களை தவிர்க்க வேண்டும் – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன்,இ.ஆ.ப., அவர்கள் அறிவுறுத்தல்.

கொரோனா நோய்த்தொற்று பரவும் அபாயம் இருப்பதால், திண்டுக்கல் மாவட்டத்தில் 2022-ஆம் ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டு விழா கொண்டாட்டங்களில் சாலைகள், பூங்காக்கள் போன்ற பொது இடங்கள், கேளிக்கை விடுதிகள், இதுபோன்ற இதர இடங்களில் 31.12.2021 அன்று இரவு பொதுவாக நடத்தப்படும் ஆங்கில புத்தாண்டு விழா கொண்டாட்டங்களில் பொதுமக்கள் பங்கேற்பதை தவிர்க்க வேண்டும்.

கூட்டம் கூடி புத்தாண்டு கொண்டாட்டங்கள் செய்யும் பட்சத்தில் தற்போது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ள, கொரோனா நோய்த்தொற்றானது அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும், சில வெளிநாடுகளிலிருந்து வரும் நபர்கள் மூலம் ஒமைக்ரான் வகை கொரோனா நோய்த் தொற்றானது தற்போது மீண்டும் பரவி வருகின்ற சூழ்நிலையில் நோய்த்தடுப்பு பணிகளை மேலும், கட்டுப்படுத்த வேண்டியது அவசியமாகிறது.

எனவே, திண்டுக்கல் மாவட்டத்தில் உணவகங்கள், தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகள், சாலைகள், மற்றும் இதர இடங்களில் 31.12.2021 அன்று இரவு நடத்தப்படும் 2022-ஆம் ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டு விழா கொண்டாட்டங்களை தவிர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.