Close

Covid-19 awareness mini marathon

Publish Date : 22/11/2021
.

செ.வெ.எண்:-56/2021

நாள்:21.11.2021

கோவிட்-19 மற்றும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாநில அளவிலான மினி மாரத்தான் -மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தார்கள்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் இளைஞர் நலம், திண்டுக்கல் மாவட்ட தடகள சங்கம், ஜி.டி.என். மருத்துவக் கல்லூரி(இயற்கை மருத்துவம் மற்றும் அறிவியல் ஆராய்ச்சி மையம்) திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கம் மற்றும் திண்டுக்கல் காஸ்மாபாலிட்டன் கிளப் ஆகியவை சார்பில் கோவிட்-19 மற்றும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாநில அளவிலான மினி மாரத்தான் திண்டுக்கல்லில் இன்று(21.11.2021) நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள், கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) திரு.ச.தினேஷ்குமார், இ.ஆ.ப., மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.வீ.இரா.ஸ்ரீனிவாசன், இ.கா.ப., ஆகியோர் முன்னிலையில் திண்டுக்கல் எஸ்.எம்.பி.எம். பள்ளி அருகில் இன்று(21.11.2021) மினி மாரத்தானை கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள். மினி மாரத்தான் ஓட்டம், திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஆர்.எம். காலனி, எம்.வி.எம். அரசு மகளிர் கல்லூரி, அஞ்சலி ரவுண்டான என முக்கிய சாலை வழியாக சென்று திண்டக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் முடிவடைந்தது. இதில் 2,000க்கும் அதிகமானோர் கலந்துகொண்டார்கள்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி வே.லதா, மாவட்ட விளையாட்டு அலுவலர் திருமதி எம்.ரோஸ்பாத்திமா மேரி, திண்டுக்கல் மாவட்ட தடகள சங்க தலைவர் திரு.ஆர்.துரை, செயலாளர் திரு.எம்.சிவக்குமார், ஜி.டி.என். கல்விக்குழுமம் செயலாளர் டாக்டர் கே.ரத்தினம், ஜி.டி.என்.கல்லூரி முதல்வர் டாக்டர் பி.பாலகுருசாமி, திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்க தலைவர் திரு.எஸ்.சண்முகம், திண்டுக்கல் மாவட்ட கால்பந்துக் கழக தலைவர் திரு.ஜி.சுந்தரராஜன், எம்.எஸ்.பி.மேல்நிலைப்பள்ளி தாளாளர் திரு.பி.முருகேசன் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.