Close

Covid-19 Children rehabilitation

Publish Date : 18/11/2021

திண்டுக்கல் மாவட்டம்

கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு, பெற்றோரை இழந்த குழந்தைகளின் மறுவாழ்வு மற்றும் பாதுகாப்பிற்கான நிவாரண நிதி பெற்று பயனடைந்த பயனாளிகள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி…

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், பெண்கள் நகர பேருந்துகளில் இலவசமாக பயணம், ஆவின் பால் விலை குறைப்பு, கொரோனா பேரிடர் காலத்தில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.4000 நிவாரணம், கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோருக்கு தனியார் மருத்துவமனையில் இலவச சிகிச்சை, ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ என்ற திட்டத்தில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது 100 நாட்களில் நடவடிக்கை எடுத்தல் என தமிழக மக்களின் வாழ்வில் புது ஒளியை ஏற்படுத்தும் வகையில் 5 முக்கிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

கிராமப்புறங்களில் உள்ள பொதுமக்களின் நலன் கருதி, அவர்களின் இல்லத்திற்கே சென்று தொற்றா நோய்களான உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய்களுக்கு பரிசோதனைகள் செய்து, மருந்துகள் வழங்குவதற்காக தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் ~மக்களைத் தேடி மருத்துவம்| என்ற மகத்தான திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். அதேபோல், தமிழகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் ஆண்டுக்கு 1,250 மருத்துவ முகாம்கள் “கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம்” மூலம் மீண்டும் புதுப்பொலிவுடன் செயல்படுத்தப்படுகிறது. உயிர் காக்கும் மருத்துவ கிசிச்சைகளை கட்டணமில்லாமல் ஏழை மற்றும் குறைந்த வருவாய் பெறும் பொதுமக்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வேண்டும் என்ற உயரிய நோக்குடன் உயிர்காக்கும் உயர் கிசிச்சைக்கான முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த பெற்றோர்களை இழந்து, ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளின் நலன்களைப் பாதுகாத்திட, அரசு சார்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து 29-5-2021 அன்று தலைமைச் செயலகத்தில் உயர் அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றினால் உயிரிழந்த பெற்றோர்களின் குழந்தைகளைக் கண்டறிந்து, அவர்களுக்குத் தேவைப்படும் உதவிகளை வழங்கிட ஏதுவாக, மாவட்ட அளவில், மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் சிறப்புப் பணிப்பிரிவு (வுயளம குழசஉந) அரசால் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளன.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், மேற்படி ஆதரவற்ற குழந்தைகளைப் பாதுகாக்கும் வகையில், நிவாரண உதவிகளை வழங்கிட அரசு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்கள். அதன்படி, கொரோனா நோய்த் தொற்றினால் பெற்றோர்களை இழந்து, ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளுக்கு, அவர்களது பெயரில் தலா ரூ.5 இலட்சம் வைப்பீடு செய்யவும், அந்தக் குழந்தை 18 வயது நிறைவடையும்போது, அந்தத் தொகை, அந்தக் குழந்தைக்கு வட்டியோடு வழங்கிடவும், 2 பெற்றோhர்களை இழந்த குழந்தைகளுக்கு அரசு இல்லங்கள் மற்றும் விடுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் தங்குவதற்கு இடம் வழங்கப்படும். இக்குழந்தைகளுக்கு பட்டப்படிப்பு வரையிலான கல்விக் கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து செலவினங்களையும் அரசே ஏற்றிடவும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். மேலும்,

  • கொரோனா நோய்த் தொற்றினால் தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளோடு இருக்கும், தந்தை அல்லது தாய்க்கு உடனடி நிவாரணத்தொகையாக ரூ.3 இலட்சம் வழங்கப்படும்.
  • அரசு காப்பகம் அல்லது விடுதிகளில் இல்லாது, உறவினர் / பாதுகாவலரின் ஆதரவில் வளரும் குழந்தைகளின் பராமரிப்புச் செலவாக, மாதந்தோறும் தலா ரு.3,000 உதவித் தொகை, அவர்கள் 18 வயது நிறைவடையும் வரையில் வழங்கப்படும்.
  • ஏற்கனவே தாய் அல்லது தந்தையை இழந்து, தற்போது கொரோனா நோய் தொற்றினால் மற்றொரு பெற்றோரையும் இழந்த குழந்தைகளுக்கும் ரூ.5 இலட்சம் அவர்களது பெயரில் வைப்பீடு செய்யப்படும்.
  • ஒவ்வொரு குழந்தைக்கும் வழங்கப்படும் உதவித் தொகை, அவர்களது கல்வி மற்றும் வளர்ச்சியும், ஒரு சிறப்புக் குழுவால் மாவட்டந்தோறும் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படும்.
  • அனைத்து அரசு நலத் திட்டங்களும் முன்னுரிமை அடிப்படையில் இக்குழந்தைகளுக்கும், நோய்த் தொற்றினால் கணவன் அல்லது மனைவியை இழந்து, குழந்தையுடன் இருக்கும் பெற்றோருக்கும் வழங்கப்படும்.
  • மேற்படி நிவாரண உதவிகள் ஒவ்வொரு குழந்தைக்கும் ஏற்றவாறு வழங்குவது குறித்த வழிகாட்டி நெறிமுறைகள் வகுத்து வெளியிட, கூடுதல் தலைமைச் செயலாளர், நிதித் துறை அவர்களது தலைமையில் வழிகாட்டுதல் குழு ஒன்று சமூக நலத் துறைச் செயலர் உள்ளிட்ட அலுவலர்கள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் / அமைப்புகளைச் சார்ந்தவர்களைக் கொண்டு அமைக்கப்படும்.

    இவ்வாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.

    மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவை செயல்படுத்தும் விதமாக, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையால் அதற்கான வழிகாட்டி நெறிமுறைகளுடன் அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி, 5 குழந்தைகளுக்கு, தலா ரூ.5 லட்சம் வைப்பீடு செய்தமைக்கான சான்றிதழ்களை, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், அக்குழந்தைகளின் பாதுகாவலர்களிடம் 16.06.2021 அன்று சென்னை தலைமைச் செயலகத்தில் வழங்கினார்கள்.

    அதன்தொடர்ச்சியாக, திண்டுக்கல் மாவட்டத்தில், கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு, பெற்றோர் ஒருவரை மட்டும் இழந்த 15 குழந்தைகளின் மறுவாழ்வு மற்றும் பாதுகாப்பிற்காக நிவாரண நிதியாக, ஒரு குழந்தைக்கு தலா ரூ.3 லட்சம் வீதம் ரூ.45 லட்சம் மதிப்பில் நிதியுதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 25.10.2021 அன்று வழங்கினார்கள்.

    திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை 78 குழந்தைகளுக்கு தலா ரூ.3 லட்சம் வீதமும், 2 குழந்தைகளுக்கு தலா ரூ.5 லட்சம் என மொத்தம் 80 குழந்தைகளுக்கு மறுவாழ்வு மற்றும் பாதுகாப்பிற்காக நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், கொரோனா தொற்று காரணமாக பெற்றோரை இழந்த 248 குழந்தைகளுக்கு நிவாரண உதவித்தொகை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    திண்டுக்கல் வசந்தம் நகரைச் சேர்ந்த திருமதி எஸ்.நாகலட்சுமி தெரிவித்ததாவது:-
    எனது கணவர் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு 06.06.2021 அன்று காலமானார். எனக்கு பாலசூரியா, முனீஸ்வரன் என்ற 2 குழந்தைகள் உள்ளனர். கணவர் இறந்ததையடுத்து இந்த குழந்தைகளை எப்படி பராமரிக்கப் போகிறோம், அவர்களை எப்படி படிக்க வைப்பது என்று மிகவும் கவலை அடைந்தேன். அப்போதுதான், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், உத்தரவுப்படி, 2 குழந்தைகளின் கல்வி செலவிற்காகவும், எதிர்காலத்திற்காகவும், கல்வி உதவித்தொகையாக தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதியை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்கள். இந்த உதவித்தொகை என் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு பெரிதும் உதவியாக இருக்கும். நிவாரண நிதி வழங்க நடவடிக்கை மேற்கொண்ட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எங்கள் குடும்பத்தினர் சார்பில் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.

    திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டம், சி.கூத்தம்பட்டியை சேர்ந்த திருமதி எஸ்.மல்லிகா தெரிவித்ததாவது:-
    எனது கணவர் கூலித்தொழிலாளி. அவர் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு காலமானார். எனக்கு 3 குழந்தைகள் உள்ளனர். கணவர் இறந்ததையடுத்து, நான் 3 குழந்தைகளுடன் எனது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறேன். எனது பெற்றோர் கூலி வேலைக்கு சென்று அதில் கிடைக்கும் வருமானத்தில் என்னையும், குழந்தைகளையும் பராமரித்து வருகின்றனர். குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து நான் கவலை அடைந்து இருந்தேன். அப்போதுதான், கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு, பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் நிவாரண உதவித்தொகை வழங்க உத்தரவிட்டிருப்பதை அறிந்து, நிவாரணம் கோரி விண்ணப்பித்தேன். எனது 3 குழந்தைகளின் கல்வி செலவிற்காகவும், எதிர்காலத்திற்காகவும், கல்வி உதவித்தொகையாக தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதியை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்கள்.

    இந்த உதவித்தொகை என் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு பெரிதும் உதவியாக இருக்கும். எனது வாழ்வில் இப்போதுதான் எனக்கு நம்பிக்கை பிறந்திருக்கிறது. நிவாரண உதவித்தொகையை பயன்படுத்தி, என் குழந்தைகளை நன்றாக படிக்க வைத்து, அவர்களை நல்ல நிலைக்கு கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டுள்ளது. உதவித்தொகை வழங்க நடவடிக்கை மேற்கொண்ட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எங்கள் குடும்பத்தினர் சார்பில் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.

    மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், ஏழை, எளியோர்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வரருகிறார்கள். தமிழக மக்களின் வாழ்வில் ஒளிவிளக்கேற்றி, அவர்கள் மட்டுமல்லாமல் அவர்களைச் சார்ந்தோர்களுக்கும் மற்றும் அவர்களின் வருங்கால சந்ததியினரையும் பாதுகாத்து, வாழ்வில் முன்னேற்றம் அடைய வழிவகை செய்துள்ளார்கள் என்றால் அது மிகையாகாது.

    வெளியீடு
    தி.நவாஸ்கான்,
    செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,
    திண்டுக்கல் மாவட்டம்.