Close

COVID 19 orphan children meeting

Publish Date : 14/11/2023
.

செ.வெ.எண்:-27/2023

நாள்:-09.11.2023

திண்டுக்கல் மாவட்டம்

கொரோனா பேரிடரில் பெற்றோர்களை இழந்த குழந்தைகள் மற்றும் அவர்களது பாதுகாவலர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் மற்றும் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ப.வேலுச்சாமி ஆகியோர் தேநீர் விருந்தளித்து கலந்துரையாடினர்.

a

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், கொரோனா பேரிடரில் பெற்றோர்களை இழந்த 13 குழந்தைகள் மற்றும் அவர்களை தற்போது பராமரிப்பு செய்து வரும் பாதுகாவலர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் மற்றும் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ப.வேலுச்சாமி ஆகியோர் இன்று(09.11.2023) தேநீர் விருந்தளித்து கலந்துரையாடினர்.

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மற்றும் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர், குழந்தைகள் நல்ல முறையில் கல்வி பயின்று சமூகத்தில் நல்ல நிலைக்கு வரவேண்டுமென வாழ்த்தி தீபாவளியை முன்னிட்டு அவர்களுக்கு இனிப்பு மற்றும் காரங்கள் வழங்கி தீபாவளி வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

கொரோனா பேரிடரில் பெற்றோர்களை இழந்த குழந்தைகள் ஐஸ்வர்யா, அன்புச்செல்வி ஆகியோர்களை பராமரிப்பு செய்து வரும் மூத்த சகோதரியான செல்வி பிரியா மற்றும் குழந்தைகள் கௌதம், ஆதவன் ஆகியோர்களை பராமரிப்பு செய்து வரும் அத்தை திருமதி வளர்மதி ஆகியோருக்கு விலையில்லா தையல் இயந்திரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திரு.ந.சிவக்குமார், மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி கோ.புஷ்பகலா, நன்னடத்தை அலுவலர் திருமதி ஜோதிமணி மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.