Close

Covid-19 vaccination mega camp-9th

Publish Date : 18/11/2021

செ.வெ.எண்:-45/2021

நாள்:17.11.2021

திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் 100 சதவீதம் இலக்கினை அடைவதற்கு ஏதுவாக 9வது முறையாக 18.11.2021 அன்று 750 இடங்களில் மாபெரும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், கொரோனா எனும் கொடிய வைரஸை முற்றிலுமாக கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் முக்கிய ஆயுதமாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. எனவே, பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை மும்முரமாக செயல்படுத்த மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள்.

பொதுமக்களின் நலன் கருதி மாநிலம் முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருகிறது. ‘கொரோனா தடுப்பூசி மருந்தே. கொரோனா பெரும் தொற்றிற்கு எதிரான முதன்மைக் கேடயம்’ என்பதை கருத்திற்கொண்டு தகுதிவாய்ந்த அனைத்து பொதுமக்களுக்கும் தடுப்பூசி அவர்தம் வசிக்கும் பகுதிகளிலேயே எளிதில் கிடைத்திடும் வகையில் வாரந்தோறும் ஒரு நாள் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் தமிழக அரசால் நடத்தப்பட்டு வருகிறது.

தகுதிவாய்ந்த பொதுமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி விரைவில் கிடைத்திடும் வகையில் வாரம்தோறும் ஒரு சிறப்பு தடுப்பூசி முகமிற்கு பதிலாக. வாரம்தோறும் இரண்டு சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்த அரசு உத்தேசித்துள்ளது. அதன்படி, வியாழக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், அறிவுறுத்தலின்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் 100 சதவீத இலக்கை அடையும் வகையில் 8 முறை மாபெரும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.

அதனைத்தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டத்தில் 9-வது முறையாக மாபெரும் தடுப்பூசி முகாம்கள் 18.11.2021(வியாழக்கிழமை) அன்று 750 இடங்களில் நடத்தப்படவுள்ளது. எனவே, இம்முகாம்களை பயன்படுத்தி அனைத்து பொதுமக்களும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். ஏற்கனவே முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் தவறாமல் 2-வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.