Close

Covid-19 vaccination mega camp – Meeting

Publish Date : 22/10/2021
.

செ.வெ.எண்:-44/2021

நாள்:21.10.2021

கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் 100 சதவீதம் இலக்கினை அடைவதற்கு ஏதுவாக 6வது முறையாக 23.10.2021 அன்று மாபெரும் தடுப்பூசி முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது-மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், கொரோனா எனும் கொடிய வைரஸை முற்றிலுமாக கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் முக்கிய ஆயுதமாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. எனவே, பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை மும்முரமாக செயல்படுத்த மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள். அதன்பேரில், மாபெரும் தடுப்பூசி முகாம் வாரந்தோறும் நடைப்பெற்று வருகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் 100 சதவீத இலக்கை அடையும் வகையில் மாபெரும் தடுப்பூசி முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று(21.10.2021) மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள், துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டு தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், அறிவுறுத்தலின்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் 100 சதவீதம் இலக்கினை அடைவதற்கு ஏதுவாக 5 முறை மாபெரும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. அதனைத்தொடர்ந்து, 6வது முறையாக 23.10.2021(சனிக்கிழமை) அன்று மாவட்டம் முழுவதும் மாபெரும் தடுப்பூசி முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, இம்முகாம்களை பயன்படுத்தி அனைத்து பொதுமக்களும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.

திண்டுக்கல் மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி பகுதிகளில் தடுப்பூசி செலுத்திக் கொள்வது சம்பந்தமான துண்டு பிரசுரங்கள் விநியோகித்தும், ஆட்டோக்கள் மூலம் மைக்செட் வைத்து பிரச்சாரம் செய்தும், பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மாவட்ட நிர்வாகம், அனைத்து பகுதிகளிலும் உள்ள கிராம மக்களுக்கு தடுப்பூசி போட தயாராக உள்ளது. பொதுமக்கள் அதற்கு ஒத்துழைக்க வேண்டும். கிராமங்களில் உள்ள சுகாதாரப் பணியாளர்கள், ஊராட்சி மன்றப் பகுதிகளில் பல்வேறு நிலைகளில் உள்ள மக்கள் பிரதிநிதிகளுடன் இணைந்து, வீடுவீடாகச் சென்று, தடுப்பூசி போடுவதன் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்திடவும், ஊராட்சித் தலைவர்கள், துணைத் தலைவர்கள் அனைவரும் வீடுவீடாகச் சென்று தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களை கண்டறிந்து, தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தி, விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்கள்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி வே.லதா, திண்டுக்கல் மாநகராட்சி ஆணையாளர் திரு.எஸ்.சிவசுப்பிரமணியம், துணை இயக்குனர்கள் (சுகாதாரப் பணிகள்) மரு.மு.வரதராஜன்(திண்டுக்கல்), மரு.வி.யசோதாமணி(பழனி) உட்பட மருத்துவ அலுவலர்கள் பலர் கலந்துகொண்டார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.