Covid-19 vaccination mega camp -Monitoring Officer inspection

செ.வெ.எண்:-16/2021
நாள்:11.09.2021
திண்டுக்கல் மாவட்டத்தில் 12.09.2021 அன்று 1,225 இடங்களில் நடைபெறும் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் தொடர்பான முன்னேற்பாடு பணிகளை கொரோனா தடுப்புப் பணிகள் கண்காணிப்பாளர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை இயக்குநர் மரு.எஸ்.சுரேஸ்குமார், இ.ஆ.ப., அவர்கள் இன்று
மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டார்கள்.
திண்டுக்கல் மாவட்டத்தில், மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் வருகின்ற 12.09.2021 அன்று 1,225 இடங்களில் நடைபெறவுள்ளது தொடர்பாக திண்டுக்கல் மாவட்டத்திற்கான கொரோனா தடுப்புப் பணிகள் கண்காணிப்பாளர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை இயக்குநர் மரு.எஸ்.சுரேஸ்குமார், இ.ஆ.ப., அவர்கள் இன்று(11.09.2021) மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில், திண்டுக்கல் சேம்பர் ஆப் காமர்ஸ் மற்றும் வாசுகி மெட்ரிகுலேசன் பள்ளி ஆகிய இடங்களில் முகாம் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு தெரிவித்ததாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், கொரோனா எனும் கொடிய வைரசை முற்றிலுமாக கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் முக்கிய ஆயுதமாக கொரோனா தடுப்பூசி கருதப்படுகிறது. எனவே, பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை மும்முரமாக செயல்படுத்த மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள்.
திண்டுக்கல் மாவட்டத்தில் கல்லூரிகள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள், திரையரங்கப் பணியாளர்கள், அங்கன்வாடி மைய ஊழியர்கள், மழலையர் காப்பகங்களின் பொறுப்பாளர்கள் மற்றும் பணியாளர்கள், நீச்சல் குளங்களின் பயிற்சியாளர்கள் மற்றும் 18 வயதுக்கு மேற்பட்ட பயிற்சி பெறுபவர்கள், செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்து வகை நிறுவனங்களின் பணியாளர்கள் அனைவருக்கும் அருகிலுள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் தடுப்பூசி முகாம்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில், மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் வருகின்ற 12.09.2021 அன்று 1,225 இடங்களில் நடைபெறவுள்ளது. கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் அவசியத்தை கருத்தில் கொண்டு பொதுமக்கள் எவ்வித இடர்பாடுகளும் இல்லாமல் தங்குதடையின்றி கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் பொருட்டு வாக்காளர் பட்டியலினைக் கொண்டு 18 வயதிற்கு மேற்பட்ட நபர்களை கணக்கெடுத்து திண்டுக்கல் மாவட்டத்திற்கான கொரோனா தடுப்பூசி இலக்கு 1,00,000-க்கும் அதிகமானோருக்கு செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, 12.09.2021 அன்று காலை 7.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது.
முகாம்களில் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும், வயதானவர்களுக்கு உதவிடும் பொருட்டு உதவியாளர்கள், முதலுதவி சிகிச்சை முன்னேற்பாடுகள் உள்ளிட்ட வசதிகளை ஏற்பாடு செய்ய சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திண்டுக்கல் ஊரக / உள்ளாட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்கள் அனைவரும் இத்திட்டத்தினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா பரவலை முற்றிலும் தடுக்க கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும் என கொரோனா தடுப்புப் பணிகள் கண்காணிப்பாளர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை இயக்குநர் மரு.எஸ்.சுரேஸ்குமார், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்கள்.
முன்னதாக, கொரோனா தடுப்புப் பணிகள் கண்காணிப்பாளர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை இயக்குநர் மரு.எஸ்.சுரேஸ்குமார், இ.ஆ.ப., அவர்கள், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், கொரோனா தடுப்பூசி முகாம் முன்னேற்பாடுகள் தொடர்பாக அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்கள்.
இந்நிகழ்வுகளில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி வே.லதா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஸ்ரீனிவாசன், இ.கா.ப., கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திரு.ச.தினேஷ்குமார்,இ.ஆ.ப., மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் திரு.சி.மாறன், திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திருமதி ம.காசிசெல்வி, பழனி வருவாய் கோட்டாட்சியர் திருமதி.ஆர்.ஆனந்திஇ கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியர் திரு.ச.முருகேசன், தனி வட்டாட்சியர் (பேரிடர் மேலாண்மை) திருமதி அ.சந்தனமேரி கீதா, மாநகராட்சி ஆணையாளர் திரு.எஸ்.சிவசுப்பிரமணியம், திண்டுக்கல் துணை இயக்குனர் (சுகாதாரப் பணிகள்) மரு.மு.வரதராஜன் உட்பட துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.