Close

Covid-19 vaccination mega camp

Publish Date : 04/10/2021

செ.வெ.எண்:-08/2021

நாள்:02.10.2021

திண்டுக்கல் மாவட்ட பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் வேண்டுகோள்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், கொரோனா எனும் கொடிய வைரஸை முற்றிலுமாக கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் முக்கிய ஆயுதமாக கொரோனா தடுப்பூசி கருதப்படுகிறது.

எனவே, பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை மும்முரமாக செயல்படுத்த மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள். அதன்பேரில் மாபெரும் தடுப்பூசி முகாம் வாரந்தோறும் நடைப்பெற்றுவருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் கீழ்க்கண்ட நகராட்சி/பேரூராட்சி/ஊராட்சிகளில் 100 சதவீத இலக்கை எட்டியுள்ளனர்.

வ. எண். நகராட்சி/பேரூராட்சி/ஊராட்சி
1. கொடைக்கானல் நகராட்சி
2. எரியோடு பேரூராட்சி
3. திருக்கூர்ணம் ஊராட்சி
4. தோளிப்பட்டி ஊராட்சி
5. குத்திலுப்பை ஊராட்சி
6. வலையப்பட்டி ஊராட்சி
7. காமனூர் ஊராட்சி
8. கே.சி.பட்டி ஊராட்சி
9. பெரியூர் ஊராட்சி
10. பாச்சலூர் ஊராட்சி
11. கும்பரையூர் ஊராட்சி
12. பூலத்தூர் ஊராட்சி
13. தாண்டிக்குடி ஊராட்சி
14. அடுக்கம் ஊராட்சி
15. பூண்டி ஊராட்சி
16. அக்கரைப்பட்டி ஊராட்சி
17. பச்சளநாயக்கன்பட்டி ஊராட்சி
18. சிங்காரக்கோட்டை ஊராட்சி
19. வேலாயுதம்பாளையம் ஊராட்சி
20. அம்மாபட்டி ஊராட்சி

மேலும் சில மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசியினை செலுத்திக்கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். எனவே, திண்டுக்கல் மாவட்டத்தில் 100 சதவீதம் இலக்கினை அடைவதற்கு ஏதுவாக 03.10.2021 அன்று ஞாயிற்றுகிழமை 898 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. நடைபெறும் இம்முகாமில் அனைத்து பொதுமக்களும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.