Close

DADW -Scholarship

Publish Date : 28/01/2022

செ.வெ.எண்:46/2022

நாள்: 28.01.2022

ஆதிதிராவிடர், பழங்குடியினர், மதம் மாறிய கிருஸ்துவ ஆதிதிராவிடர் மாணாக்கர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி, சுயநிதி கல்லூரி மற்றும் பள்ளிகளில் 2021-2022 ஆம் கல்வியாண்டில் கல்வி பயிலும் ஆதிதிராவிடர், பழங்குடியினர், மதம் மாறிய கிருஸ்துவ ஆதிதிராவிடர் மாணாக்கர்களுக்கு ப்ரீ மெட்ரிக், போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்க கடந்த 6-ஆம் தேதி முதல் http://escholarship.tn.gov.in என்ற இணையதளம் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. விண்ணப்பிக்க கடைசி நாள் 10.02.2022 தேதி ஆகும்.

திண்டுக்கல் மாவட்டத்தில் தகுதியுள்ள மாணாக்கர்கள் தங்களது கல்வி உதவித்தொகை விண்ணப்பங்களை உரிய முறையில் பூர்த்தி செய்து, சாதி, வருமானம், மதிப்பெண் சான்றுகள், வங்கிக் கணக்கு புத்தக நகல் மற்றும் ஆதார் அட்டை நகல்களுடன் தாங்கள் பயிலும் கல்வி நிலையங்களில் ஒப்படைத்து, இக்கல்வியாண்டுக்கான கல்வி உதவித் தொகையை பெற்று பயனடையலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.