DADWO Dindigul – Post Office Account – Notification
செ.வெ.எண்:-48/2023
நாள்:-25.05.2023
திண்டுக்கல் மாவட்டம்
ஆதார் இணைப்புடன் கூடிய வங்கிக் கணக்கு இல்லாத மாணாக்கர்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தில் ஆதார் மற்றும் மொபைல் எண்ணை பயன்படுத்தி வங்கி கணக்கு தொடங்கி பயன்பெறலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு / அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி பள்ளிகளில் 2022-2023 ஆம் கல்வியாண்டில் கல்வி பயிலும் ஆதிதிராவிடர், பழங்குடியினர், மதம் மாறிய கிருத்துவ ஆதிதிராவிடர் மாணாக்கர்களுக்கு போஸ்ட் / ப்ரீ மெட்ரிக் கல்வி உதவித் தொகை பெற ஆதார் இணைப்புடன் கூடிய வங்கிக் கணக்கு இல்லாத மாணாக்கர்கள் அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியின் மூலம் பள்ளிகளிலேயே ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு தொடங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் ஆதார் இணைப்புடன் கூடிய வங்கிக் கணக்கு இல்லாத மாணாக்கர்கள் அருகிலுள்ள தபால் நிலையம் மற்றும் தபால்காரருக்கு வழங்கப்பட்டுள்ள ஸ்மார்ட் போன் மற்றும் பயோமெட்ரிக் மூலம் மாணாக்கர்களின் ஆதார் மற்றும் மொபைல் எண்ணை பயன்படுத்தி விரல் ரேகை மூலம் ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு தொடங்கி பயன் பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.