Close

District Adi Dravida Welfare Officer – Notification

Publish Date : 02/08/2022

செ.வெ.எண்:-02/2022

நாள்:01.08.2022

திண்டுக்கல் மாவட்டம்

மனித கழிவுகளை மனிதனே அகற்றும் தொழில்புரிவோர்கள் தடுப்பு மற்றும் அவர்களின் மறுவாழ்வுக்கான சட்டம் குறித்து மாவட்ட அளவிலான விழிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவில் உறுப்பினராக சமூக ஆர்வலர்கள் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் திண்டுக்கல் மாவட்டத்தில் மனித கழிவுகளை மனிதனே அகற்றும் தொழில்புரிவோர்கள் தடுப்பு மற்றும் அவர்களின் மறுவாழ்வுக்கான சட்டம் 2013-ன் படி மாவட்ட அளவிலான விழிப்பு மற்றும் கண்காணிப்புக் குழு அமைக்கப்படவுள்ளது.

மேற்படி குழுவில் உறுப்பினர்களாக சேர விரும்பும் திண்டுக்கல் மாவட்டத்தில் வசிக்கும் சமூக ஆர்வலர்கள், அவர்களின் முழு விபரத்துடன் (செய்தி வெளியான 15 நாட்களுக்குள்) திண்டுக்கல் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.