Close

DBCMBCWO-Sweeper Posting

Publish Date : 19/05/2022

செ.வெ.எண்:-32/2022

நாள்: 19.05.2022

திண்டுக்கல் மாவட்டம்

கல்வி விடுதிகளில் காலியாக உள்ள பகுதிநேர தூய்மைப்பணியாளர் பணியிடங்களுக்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

திண்டுக்கல் மாவட்டம், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் கல்வி விடுதிகளில் காலியாக உள்ள பகுதிநேர தூய்மைப்பணியாளர் பணியிடங்கள் தகுதியானவர்களைக் கொண்டு நிரப்பப்படவுள்ளன.

அதன்படி, பகுதிநேர தூய்மைப் பணியாளர்கள் மாதம் ரூ.3,000 தொகுப்பூதியம் அடிப்படையில் 13 ஆண்கள் மற்றும் 15 பெண்கள் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. அதன்படி, ஆண்கள்(முன்னுரிமை உள்ளவர்கள்) பொதுப்பிரிவு-1, தாழ்த்தப்பட்ட பிரிவு-1, மிகவும் பிற்படுத்தப்பட்டோர்/சீர்மரபினர்-1, ஆண்கள்(முன்னுரிமை இல்லாதோர்) பொதுப்பிரிவு-3, பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம் அல்லாதோர்)-3, பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்)-1, தாழ்த்தப்பட்டோர்(அருந்ததியர்)-1, மிகவும் பிற்படுத்தப்பட்டோர்/சீர்மரபினர்-2, பெண்கள்(முன்னுரிமை உள்ளோர்) பொதுப்பிரிவு-1, பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம் அல்லாதோர்)-1, மிகவும் பிற்படுத்தப்பட்டோர்/சீர்மரபினர்-1, பெண்கள்(முன்னுரிமை இல்லாதோர்) பொதுப்பிரிவு-5, பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம் அல்லாதோர்)-3, தாழ்த்தப்பட்டோர்-2, மிகவும் பிற்படுத்தப்பட்டோர்/சீர்மரபினர்-2 ஆகிய பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.

மேற்கண்ட பணியிடங்கள் நேர்காணல் மூலம் இனச்சுழற்சியின் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தமிழில் எழுத. படிக்கத தெரிந்திருக்க வேண்டும். வயது வரம்பு: 1.7.2022 தேதியில் SC/ST – 18 முதல் 35, BC, BCM, MBC & DNC – 18 முதல் 32, இதர பிரிவினர் 18 முதல் 30 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளில் அனுமதிக்கப்பட்டவாறு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

மேற்படி தகுதிகளுடன் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள விடுதிகளில் பகுதிநேர தூய்மைப்பணியாளர் (தொகுப்பூதியம்) பணி புரிய விருப்பம் உள்ளவர்கள், விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து அதில் சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஒட்டி, கல்வித்தகுதி மற்றும் வயது, சாதிச் சான்றிதழ், முன்னுரிமை சான்றிதழ், ஆதார் அட்டை, குடும்ப அட்டை அல்லது இருப்பிட சான்று, வேலை வாய்ப்பக பதிவு (இருப்பின்) ஆகிய சான்றுகளின் நகல்கள் இணைத்து, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீறுபான்மையினர் நல அலுவலகத்தில் 30.05.2022-க்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு சம்பந்தப்பட்ட அலுவலகத்தை நேரில் தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.