Close

DBCW DEPARTMENT

Publish Date : 18/07/2019

செ.வெ.எண்:56/2019 நாள்:18.07.2019

திண்டுக்கல் மாவட்டம்

பத்திரிக்கைச்செய்தி

தமிழ்நாட்டில் சொந்தக் கட்டிடங்களில் இயங்கும் கிறித்துவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் சீரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு நிதி உதவி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இப்பணிக்காக தமிழக அரசு ரூ.1.00 கோடி சிறுபான்மையினர் நலத்துறைக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசு தகுதியின் அடிப்படையில் நிதி உதவி வழங்கிட தயாராக உள்ளமையால் கிறித்துவ தேவாலயங்களிடமிருந்து அதிகமான அளவில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே, பின்வரும் தகுதிகளின் அடிப்படையில் விண்ணப்பங்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு நிதி வழங்கப்படும்.

தகுதிகள்:

1. கிறித்துவ தேவாலயம் 10 ஆண்டுகளுக்கு மேலாக சொந்த கட்டிடத்தில் இயங்கி இருத்தல் வேண்டும். தேவாலயம் கட்டப்பட்ட இடம் பதிவுத்துறையில் பதிவு செய்திருத்தல் வேண்டும். தேவாலயமும் பதிவு செய்திருக்க வேண்டும்.

2. தேவாலயத்தினை சீரமைப்பு பணிக்காக வெளி நாட்டிலிருந்து எவ்வித நிதி உதவியும் பெற்றிருத்தல் கூடாது. சான்றிதழ் உரிய படிவத்தில் அளிக்க வேண்டும்.
நடப்பாண்டில் திருச்சி, திருவாரூர், கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி, கடலூர், ஈரோடு, விருதுநகர், கோயம்புத்தூர், கரூர், விழுப்புரம், சேலம், நாகப்பட்டினம் மாவட்டங்களில் (12) உள்ள 16 தேவாலயங்களுக்கு ரூ.39.62 இலட்சம் நிதி ஒப்பளிக்கப்பட்டுள்ளன.

விண்ணப்பப்படிவம் மற்றும் சான்றிதழ் இணையதள முகவரியில் (www.bcmbcmw@tn.gov.in)-ல் வெளியிடப்பட்டுள்ளது. இதனை படியிறக்கம் செய்தும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப படிவத்துடன் பிற்சேர்க்கை – II & III பூர்த்தி செய்து அனைத்து உரிய ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களோடு திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

மாவட்ட ஆட்சித் தலைவரால் நியமிக்கப்பட்ட குழுவினரால் கிறித்துவ தேவாலயங்களை ஸ்தல ஆய்வு செய்து கட்டடத்தின் வரைபடம் மற்றும் திட்ட மதிப்பீடு ஆகியவற்றுடன் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்து உரிய முன்மொழிவுகளுடன் சிறுபான்மையினர் நல இயக்ககத்திற்கு நிதி உதவி வேண்டி மாவட்ட ஆட்சித்தலைவரால் பரிந்துரை செய்யப்படும். நிதி உதவி இரு தவணைகளாக தேவாலயத்தின் வங்கிக் கணக்கில் மின்னணு பரிவர்த்தனை மூலம் செலுத்தப்படும்.

இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்;.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.