Close

DBCWO Dept -(BC Scholarship)

Publish Date : 29/12/2021

செ.வெ.எண்:-71/2021

நாள்: 28.12.2021

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் பிவ / மிபிவ / சீம மாணவ / மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்

2021-22ம் ஆண்டு முதல் அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவியருக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை திட்டங்களுக்கான பெற்றோரது ஆண்டு வருமான உச்ச வரம்பினை ரூ.2,00,000/-லிருந்து ரூ.2,50,000/-ஆக உயர்த்தி அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் பிவ / மிபிவ / சீம மாணவ / மாணவியருக்கு இலவச கல்வித்திட்டத்தின் கீழ் எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

மேலும் 2021-22ம் ஆண்டிற்கான முதுகலை (எம்.ஏ., எம்.காம்.,எம்.எஸ்ஸி, எம்.பில்., எம்.பி.ஏ., பிஎச்.டி.,) பாலிடெக்னிக் (டிப்ளமோ – மூன்றாண்டு பட்டயபடிப்பு) தொழிற்படிப்பு (மருத்துவ படிப்புகளான எம்.பி.பி.எஸ்., கால்நடை மருத்துவம், பல் மருத்துவம், சித்த மருத்துவம் போன்ற மருத்துவ பிரிவுகளுக்கும், வேளாண்மை, பொறியியல், சட்டம்) போன்ற படிப்புகளில் பயிலும் பிவ / மிபிவ / சீம மாணவ / மாணவியர்கள் புதிதாக கல்வி உதவித்தொகை கோரி விண்ணப்பங்கள் விண்ணப்பிக்க பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2,50,000/- ஆக உயர்த்தி அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் அல்லது பிற்படுத்தப்பட்டோர் நல இயக்கக மின்னஞ்சல் முகவரி dir-bcmw@nic.in மற்றும் தொலைப்பேசி எண் 044-29515942 மூலம் பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககத்தை அனுகி பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.