DBCWO – Dindigul Ulema Pension
செ.வெ.எண்:-35/2022
நாள்:-13.06.2022
திண்டுக்கல் மாவட்டம்
திண்டுக்கல் மாவட்டத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தின் மூலம் உலமாக்கள் மற்றும் பணியாளர் நலவாரிய அட்டை பெற்றுள்ள 60 வயது நிறைவடைந்தவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன் இ.ஆ.ப., அவர்கள் தகவல்
திண்டுக்கல் மாவட்டத்தில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தின் மூலம் உலமாக்கள் மற்றும் பணியாளர் நலவாரிய அட்டை பெற்றுள்ளவர்களில், 60 வயது நிறைவடைந்தவர்களுக்கு ஓய்வூதியம் மாதம் ரூ.1,000ஃ- வழங்கப்பட்டு வருகிறது.
எனவே, இவ்வாரியத்தின் மூலம் வழங்கப்படும் ஓய்வூதியம் பெற விரும்பும் 60 வயது நிறைவடைந்த உறுப்பினர்கள் உரிய விண்ணப்பத்துடன் அசல் உலமா அட்டை, ஆதார் நகல் மற்றும் வயது சான்று உள்ளிட்ட ஆவணங்களுடன் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பித்திடுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர்.ச.விசாகன்,இ.ஆ.ப அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.