DBCWO ( Hostel Instruction)

Publish Date : 07/06/2019

செ.வெ.எண்:-09/2019                                                                                                                                                                                                                                             நாள்:06.06.2019

திண்டுக்கல் மாவட்டம்
பத்திரிக்கை செய்தி

திண்டுக்கல் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் / மிகப்பிற்படுத்தப்பட்டோர் / சீர்மரபினர் மாணவர் மற்றும் மாணவியர்களுக்கென கீழ்கண்டவாறு விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.

வ.எண்.              விடுதியின் விபரம்                                                                மாணவர்களுக்கானது                 மாணவியர்களுக்கானது

1.                            பள்ளி விடுதிகள்                                                                                        28                                                                   14

2.                           கல்லூரி/பாலிடெக்னிக் / ஐடிஐ விடுதிகள்                                          1                                                                     6

2) பள்ளி விடுதிகளில் 4 முதல் 12 வகுப்பு வரை பயில்கின்ற மாணவர் / மாணவியர்களும் கல்லூரி / பாலிடெக்னிக் / ஐடிஐ விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு மற்றும் பாலிடெக்னிக் / ஐடிஐ பயிலும் மாணவர் / மாணவியர் சேரத் தகுதியுடையவர்கள் ஆவர். பிவ / மிபிவ / சீம விடுதிகளில் அனைத்து வகுப்பை சார்ந்த மாணவர் ஃ மாணவியர்களும் குறிப்பிட்ட விகிதாச்சார அடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர்.

3) விடுதிகளில் பின்வரும் எவ்வித செலவினமும் இல்லாமல் சலுகைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. அனைத்து விடுதி மாணவர் / மாணவியர்களுக்கும் உணவும் தங்கும் வசதியும் அளிக்கப்படும். 10ம் வகுப்ப வரை பயிலும் மாணவர் ஃ மாணவியருக்கு சீருடைகள் வழங்கப்படும். மேலும், 10ம் வகுப்ப மற்றும் 12 ம் வகுப்பு பயிலும் மாணவர் ஃ மாணவியருக்கு சிறப்பு வழிகாட்டிகள் வழங்கப்படும். மலைப்பிரதேசங்களில் இயங்கும் விடுதிகள் கம்பளி மேலாடைகள் வழங்கப்படும்.

4) விடுதிகளில் சேருவதற்கான தகுதிகள்

• பெற்றோர் / பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.1,00,000/-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

• இருப்பிடத்திலிருந்து பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 8 கி.மீக்கு மேல் இருக்க வேண்டும். இந்த தூர விதி மாணவியருக்க பொருந்தாது.

5) தகுதியுடைய மாணவ / மாணவியர் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர் / காப்பாளினிகளிடமிருந்தோ அல்லது மாவட்ட ஆட்சிதலைவர் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திலிருந்தோ / இணைஇயக்குநர் (கள்ளர் சீரமைப்பு) அலுவலகத்திலிருந்தோ இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.

6) பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பள்ளி விடுதிகளை பொறுத்தவரை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினியிடம் மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் 20.06.2019 -க்குள்ளும், கல்லூரி விடுதிககளை பொறுத்தவரை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினியிடம் மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் 15.07.2019 -க்குள்ளும் சமர்ப்பிக்க வேண்டும். மாணவ, மாணவியர்கள் விண்ணப்பிக்கும்பொழுது சாதி மற்றும் ஆண்டு வருமானம் குறித்த சான்றிதழ்கள் யாதும் அளிக்கத்தேவையில்லை விடுதியில் சேரும் பொழுது மட்டும் இச்சான்றிதழ்களை அளித்தால் போதுமானது.

7) தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு விடுதியிலும் முகாம் வாழ் இலங்கைத்தமிழர்களின் குழந்தைகளுக்கென தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. எனவே மாணவ / மாணவியர் அரசின் இச்சலுகைகளை பெற்று பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.டி.ஜி.வினய், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்..

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.