Close

DBCWO-Scholarship

Publish Date : 07/02/2024

செ.வெ.எண்:-17/2024

நாள்:-06.02.2024

திண்டுக்கல் மாவட்டம்

பிவ, மிபிவ, சீம மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட (பிவ), மிகப் பிற்படுத்தப்பட்ட (மிபிவ) மற்றும் சீர்மரபினர் (சீம) மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது. v

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் பிவ, மிபிவ, சீம மாணவ, மாணவிகளுக்கு இலவச கல்வித்திட்டத்தின் கீழ் எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2,50,000-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

நடப்பாண்டில் புதியது மாணாக்கர்கள் https://ssp.tn.gov.in என்ற இணைய தள முகவரியில் Student Login-இல் சென்று ஆதார் எண் அளித்து e-KYC Verification செய்ய வேண்டும். கல்வி உதவித்தொகை இணையதளம் (Scholarship portal) புதியதிற்கு (Fresh) 01.02.2024 முதல் செயல்படுகிறது. புதியதிற்கான விண்ணப்பங்களை 29.02.2024-ஆம் தேதிக்குள் இணையதளம் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு தங்கள் கல்லூரியில் உள்ள கல்வி உதவித்தொகை உதவியாளரையோ அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தையோ தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.