DDAWO-awareness camp
செ.வெ.எண்:-87/2025
நாள்:-28.02.2025
திண்டுக்கல் மாவட்டம்
மாற்றுத்திறனாளிகளுக்கு அரசால் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் குறித்தான தெருமுனை நாடக நிகழ்வுகள் மற்றும் சாலை விளக்கம் 03.03.2025 மற்றும் 04.03.2025 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
திண்டுக்கல் மாவட்டத்தில் கிராமப்புறங்களில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசால் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டம் குறித்தான தெருமுனை நாடக நிகழ்வுகள் மற்றும் சாலை விளக்கம் மூலமாக விழிப்புணர்வை ஏற்படுத்திட முடிவெடுக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் மாற்றுத்திறனாளிகளுக்காக ஊரக வளர்ச்சித்துறை, வேலைவாய்ப்புத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, சமூக நலம் மற்றும் சத்துணவுத்திட்டத் துறை மற்றும் கல்வித்துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களின் விபரங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான திட்டங்கள் அடங்கிய துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட உள்ளது. அதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன.
விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறும் நாள், நேரம் மற்றும் இடம் விவரம் வருமாறு:-
03.03.2025 அன்று காலை 09.30 மணிக்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அன்று காலை 11.00 மணிக்கு திண்டுக்கல் காமாராஜர் பேருந்து நிலையம், மாலை 01.30 மணிக்கு வடமதுரை பேருந்து நிலையம், மாலை 03.00 மணிக்கு குஜிலியம்பாறை பேருந்து நிலையம், மாலை 05.00 மணிக்கு வேடசந்தூர் பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
04.03.2025 அன்று காலை 09.30 மணிக்கு கோபால்பட்டி பேருந்து நிலையம், காலை 11.00 மணிக்கு நத்தம் பேருந்து நிலையம், நண்பகல் 12.00 மணிக்கு ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையம், மாலை 01.30 மணிக்கு பழனி பேருந்து நிலையம், மாலை 03.00 மணிக்கு செம்பட்டி பேருந்து நிலையம், மாலை 05.00 மணிக்கு நிலக்கோட்டை பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
எனவே, இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் பங்கேற்று அரசு நலத்திட்டங்கள் குறித்து அறிந்து பயன்பெறலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.