Close

DDAWO – Collector GDP Special camp

Publish Date : 23/11/2021
.

.

செ.வெ.எண்:-62/2021

நாள்:23.11.2021

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக கூட்ட அரங்கில் இன்று(23.11.2021) நடைபெற்றது.

இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள். மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து பல்வேறு கோரிக்கை தொடர்பான 278 மனுக்களை பெற்றுக்கொண்டார்கள். இதனைத்தொடர்ந்து 3 நபர்களுக்கு தலா ரூ.7,650 மதிப்பிலான மூன்று சக்கர சைக்கிள், ஒரு நபருக்கு ரூ.7,750 மதிப்பிலான சிறப்பு சக்கர நாற்காலி, ஒரு நபருக்கு ரூ.6,450 மதிப்பிலான சக்கர நாற்காலி ஆகியவற்றை பயனாளிகளுக்கு வழங்கினார்கள்.

இக்கூட்டத்தில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திருமதி மு.ஜெயசீலி உட்பட துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.