Close

DDAWO- DAPS – ID CAMP

Publish Date : 10/01/2022

செ.வெ.எண்:-25/2022

நாள்:10.01.2022

விடுபட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்க மருத்துவ குழு சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

திண்டுக்கல் மாவட்டத்தில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலகம் மூலம் 21 வகையான மாற்றுத்திறனாளிகள் 38,676 நபர்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. தேசிய அடையாள அட்டை பெறாமல் விடுபட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு ஊராட்சி ஒன்றியம் வாரியாக 14 ஊராட்சி ஒன்றியங்களில் மருத்துவ குழுவுடன் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்க முடிக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது, விடுபட்டுள்ள ஒரு சில மாற்றுத்திறனாளிகள் பயனடைவதற்காக கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு தேசிய அடையாள அட்டை வழங்கிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனவே, தேசிய அடையாள அட்டை கோரும் மாற்றுத்திறனாளிகள் தங்களது பெயர், தொலைபேசி எண்ணுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலகத்தில் தொலைபேசி மூலமாகவோ, நேரிலோ அல்லது பாதுகாவலர்கள் மூலமாகவோ பெயரை பதிவு செய்துகொள்ள வேண்டும். பெயர் பதிவு செய்யப்பட்டவுடன் மருத்துவ குழுவிற்கு பரிந்துரை செய்யப்படும். மாற்றுத்திறனாளிகள் மருத்துவக் குழுவிற்கு செல்லும் பொழுது ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-4 உடன் மருத்துவக் குழுவில் ஆஜராக வேண்டும். மருத்துவர் சான்று பெறப்பட்டவுடன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் தேசிய அடையாள அட்டை வழங்கப்படும்.

மேலும் விபரங்களுக்கு, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக தொலைபேசி எண்:0451-2460099-ல் தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.