Close

DDAWO Department

Publish Date : 08/11/2021

செ.வெ.எண்:-15/2021

நாள்:08.11.2021

நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்

திண்டுக்கல் மாவட்டத்தில் 21 வகையான மாற்றுத்திறனாளிகளுக்கு, சிறப்பு மருத்துவர்கள் மூலம் தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம்கள் வரந்தோறும் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நடைபெற்று வந்தது.

மாற்றுத்திறனாளிகள் நலன் கருதி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 14 வட்டாரங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு, தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. நவம்பர் 2021 மாதத்தில் 09.11.2021 அன்று ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், 11.11.2021 அன்று பழனி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், 16.11.2021 அன்று திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், 19.11.2021 அன்று நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது.

இம்முகாமில் கலந்து கொள்ள வரும் மாற்றுத்திறனாளிகள் சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவு புகைப்படம் – 4, ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல் ஆகியவற்றுடன் நேரில் வந்து பயன்பெற அறிவுறுத்தப்படுகிறது. ஏற்கனவே, தேசிய அடையாள அட்டை பெற்றவர்கள் இம்முகாமில் கலந்து கொள்ள தேவையில்லை.

மேலும், விவரங்களுக்கு 0451-2460099 என்ற மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். எனவே, மாற்றுத்திறனாளிகள் மேற்கண்ட முகாம்களில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.