Close

DDAWO Department

Publish Date : 15/11/2021

செ.வெ.எண்:-25/2021

நாள்:12.11.2021

திண்டுக்கல் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்

திண்டுக்கல் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் 23.11.2021 அன்று காலை 11.00 மணியளவில், திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் உள்ள, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் தங்கள் கோரிக்கை மனுக்களை நேரடியாக, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் அளிக்கலாம். இக்குறைதீர்க்கும் கூட்டத்தில், கலந்துகொள்ளும் மாற்றுத்திறனாளிகள் மனுக்களுடன் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை, குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், புகைப்படம் ஆகியவற்றை இணைத்து மனுக்கள் அளிக்க வேண்டும்.

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் தங்கள் கோரிக்கை மனுக்களை மாற்றுத்திறனாளிகளுக்காக நடைபெறும் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அளித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், திண்டுக்கல்