Close

DDAWO-ELECTRONIC BRAILLE READER

Publish Date : 12/01/2022

செ.வெ.எண்:-31/2022

நாள்:11.01.2022

பார்வைத்திறன் குறையுடையோருக்கு எளிதில் பிரையிலி முறையில் கற்பதற்கு ஏதுவாக மின்னணு வடிவில் உள்ள புத்தகப்படி (E BOOK) Braille எழுத்துக்கள் வடிவில் தொடு உணர்வுடன் அறிய உதவிடும் வாசிக்கும் கருவி வழங்கப்படவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பார்வைத்திறன் குறையுடையோருக்கு எளிதில் பிரையிலி முறையில் கற்பதற்கு ஏதுவாக மின்னணு வடிவில் உள்ள புத்தகப்படி (E BOOK) Braille எழுத்துக்கள் வடிவில் தொடு உணர்வுடன் அறிய உதவிடும் வாசிக்கும் கருவி Electronic Braille Reader வழங்கப்படவுள்ளது.

எனவே, திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பார்வை திறன் பாதிக்கப்பட்ட Braille வாசிக்க தெரிந்த மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், பாஸ்போர்ட் புகைப்படம் 2, ஆகியவற்றுடன் இளநிலை கல்வி முடித்ததற்கான சான்று அல்லது PG படிப்பதற்கான சான்று அல்லது TET, TNPSC போன்ற போட்டித்தேர்விற்கு பயிற்சி பெறுபவர்களான சான்று ஆகிய தகுதிகள் உடையவர்களை தேர்வுக்குழு மூலம் தேர்வு செய்து Electronic Braille Reader வழங்கப்படவுள்ளது.

தகுதியுடையவர்கள் திண்டுக்கல், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் 21-01-2022-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

மேலும் விவரங்களுக்கு 0451-2460099 என்ற மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.