Close

DDAWO – Grievance Day Petition – RDO Dindigul

Publish Date : 30/01/2024

செ.வெ.எண்:-58/2024

நாள்:-25.01.2024

திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் கிழக்கு வட்டம், கம்பிளியம்பட்டி கிராம சமுதாய கூடத்தில் 31.01.2024 அன்று மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் கிழக்கு வட்டம், கம்பிளியம்பட்டி கிராமம், கம்பிளியம்பட்டி கிராம சமுதாய கூடத்தில் திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் 31.01.2024 அன்று காலை 10.30 மணியளவில் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில் திண்டுக்கல் கிழக்கு வட்டத்தைச் சேர்ந்த அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளும் கலந்துகொண்டு, தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்து, தீர்வு கண்டு பயன்பெறலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.