Close

DDAWO ID CARD CAMP

Publish Date : 22/07/2019

செ.வெ.எண்:62/2019 நாள்:20.07.2019

திண்டுக்கல் மாவட்டம்

மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் முகாம் திங்கள் கிழமைதோறும் நடைபெற உள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

திண்டுக்கல் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாம் ஒவ்வொரு திங்கள் கிழமைதோறும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் காலை 10.00 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை நடைபெறும்.

இம்முகாமில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையிலிருந்து எலும்பு முறிவு மருத்துவர், காது, மூக்கு, தொண்டை பிரிவு மருத்துவர், மனநல மருத்துவர் ஆகியோரை கொண்ட மருத்துவ குழுக்கள் கலந்துகொண்டு மாற்றுத்திறனாளிகளை பரிசோதனை செய்து மருத்துவச்சான்று வழங்கப்படும். மேற்படி மருத்துவ அலுவலர் வழங்கும் சான்றிதழின் அடிப்படையில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்படவுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் இதுநாள்வரை மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகள் மட்டும் குடும்பஅட்டை நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் 4 புகைப்படத்துடன் இதற்குமுன் சிகிச்சை பெற்ற ஆவணங்களுடன் வந்து கலந்து கொண்டு பயன்பெறலாம்.

மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாம் ஒவ்வொரு திங்கள் கிழமைதோறும் நடைபெறும் என்பதால் மாற்றுத்திறனாளிகள் மற்ற நாட்களில் அடையாள அட்டை பெறுவதற்கு வரவேண்டாம் என தெரிவிக்கப்படுகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் மட்டும் ஒவ்வொரு திங்கள் கிழமைதோறும் நடைபெறும் முகாமில் அனைத்து ஆவணங்களுடன் நேரில் வந்து கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெற்று பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்;.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.