DDAWO-RPWD registration
செ.வெ.எண்:-30/2022
நாள்:11.01.2022
மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை செய்திடும், அனைத்து தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் மாற்றுத்திறனாளிகள் நலச்சட்டம் RPWD சட்டம் 2016-ன் படி பதிவு செய்திட வேண்டும். – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம், திண்டுக்கல் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை செய்திடும், அனைத்து தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் மாற்றுத்திறனாளிகள் நலச்சட்டம் RPWD சட்டம் 2016-ன் படி பதிவு செய்திட வேண்டும். RPWD சட்டம் 2016ன் படி பதிவு செய்யப்படாத, மாற்றுத்திறனாளிகளுக்காக சேவை செய்திடும் தொண்டு நிறுவனங்கள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் 31-01-2022-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பதிவு செய்திட வேண்டும்.
தவறும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் செயல்பாட்டினை மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நிறுத்தம் செய்ய நேரிடும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.