DDAWO-SEWING MECHINE
செ.வெ.எண்:-02/2021
நாள்:01.12.2021
இலவச மோட்டர் பொருத்திய தையல் இயந்திரம் பெற
மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம், திண்டுக்கல் மாவட்டத்தில் 2021-2022-ஆம் நிதியாண்டுக்கு, கைகள் மற்றும் கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள், காது கேளாத மற்றும் வாய் பேச இயலாத மாற்றத்திறனாளிகள் , மிதமான மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகள் மற்றும் 75 சதவீதத்திற்கு மேல் பாதிக்கப்பட்ட மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளியின் தாய்மார்களுக்கு இலவச மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இதன்படி, மேற்கண்டபிரிவுகளில் உள்ள 18 வயது முதல் 45 வயதுக்குட்பட்ட தையல் பயிற்சி பெற்ற மாற்றுத்திறனாளிகள் மற்றும் 75 சதவீதம் மனவளர்ச்சி குன்றியோரின் தாய்மார்கள் இத்திட்டத்தின் பயனடைய மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல் – 1, ஆதார் அட்டைநகல் – 1, தையல் பயிற்சி சான்று – 1, குடும்ப அட்டை நகல் – 1 ஆகியவற்றுடன் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றத்திறனாளிகள் நல அலுவலகத்தில் 20.12.2021-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம். மேலும் விபரங்களுக்கு, 0451-2460099 என்ற மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.