DDAWO- Special GDP

செ.வெ.எண்:-03/2022
நாள்:04.04.2022
திண்டுக்கல் மாவட்டம்
மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று(04.04.2022) மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பெற்றுக்கொண்டு தெரிவித்ததாவது:-
திண்டுக்கல் மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் பிரதிமாதம் முதல் திங்கள்கிழமைதோறும் காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், திண்டுக்கல், பழனி மற்றும் கொடைக்கானல் கோட்டாட்சியர் அலுவலகங்களில் ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமைதோறும் காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரையிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படுகிறது.இக்கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் நலத்திட்டங்கள், கடனுதவிகள் கோரி மாற்றுத்திறனாளிகள் மனு அளிக்கலாம். மேலும், தொழிற்கடன், கல்விக்கடன் உட்பட அரசின் கடனுதவித் திட்டங்கள் தொடர்பாகவும் மனுக்கள் அளித்து பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.இக்கூட்டத்தில், கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) திரு.ச.தினேஷ்குமார்,இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி வே.லதா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு.ஜெயசீலி, மகளிர் திட்ட அலுவலர் திரு.சரவணன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.