Close

DDAWO Training Centre

Publish Date : 20/11/2023

செ.வெ.எண்:-41/2023

நாள்: 16.11.2023

திண்டுக்கல் மாவட்டம்

காது கேளாத மற்றும் வாய் பேச இயலாதவருக்கான ஆரம்ப நிலை பயிற்சி மையம் (0-6 வயதிற்குட்பட்ட குழந்தைகள்) செயல்படுத்த அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

திண்டுக்கல் மாவட்டத்தில் காது கேளாத மற்றும் வாய் பேச இயலாதவருக்கான ஆரம்ப நிலை பயிற்சி மையம் (0-6 வயதிற்குட்பட்ட குழந்தைகள்) திட்டத்தை செயல்படுத்தி நடத்துவதற்கு மாற்றுத்திறனாளிகள் நல சட்டம் 2016-ல் பதிவு செய்யப்பட்ட அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் 20.11.2023-ஆம் தேதிக்குள் திண்டுக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நேரில் விண்ணப்பிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக தொலைபேசி (0451-2460099) எண்ணில் சம்பந்தப்பட்ட அலுவலர்களை தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.