Close

DDAWO(KODAIKANAL CAMP)

Publish Date : 13/06/2025

செ.வெ.எண்:-35/2025

நாள்:-12.06.2025

திண்டுக்கல் மாவட்டம்

கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் 14.06.2025 அன்று நடைபெற உள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் சுற்று வட்டார மலைப் பகுதிகளில் உள்ள மக்கள் சிரமப்பட்டு 100 கி.மீட்டருக்கு மேல் பயணம் செய்து திண்டுக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நடைபெறும் முகாமில் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்று வருகின்றனர்.

மேலும், மாற்றுத்திறனாளிகள் சிரமத்தை கருத்தில் கொண்டு, மாற்றுத்திறனாளிகள் கொடைக்கானலில் அடையாள அட்டை பெறுவதற்கு வழிவகை செய்யும் வண்ணமாக மாவட்ட ஆட்சியரின் அறிவுரைப்படி, பிரதிமாதம் கடைசி வியாழக்கிழமைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் நடத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த வகையில் முதல் கட்டமாக இந்த முகாமை 14.06.2025(சனிக்கிழமை) அன்று காலை 10.00 மணியளவில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைக்கவுள்ளார்கள்.

இம்முகாமில் புதியதாக அடையாள அட்டை பெற கலந்துகொள்ளும்;;; நபர்கள் ஆதார் அட்டை நகல், புகைப்படம்-4 மற்றும் முன் மருத்துவம் பார்க்கப்பட்ட ஆவணங்களுடன் கலந்து கொள்ளவும். மேலும், அடையாள அட்டை புதுப்பிக்க மற்றும் பஸ்பாஸ், இரயில் பாஸ் பெற விரும்பும் மாற்றுத்திறனாளிகள் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.