Close

DDHS Dindigul

Publish Date : 25/07/2022

செ.வெ.எண்:-70/2022

நாள்: 23.07.2022

திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் மாவட்டத்தில் ஜூலை 24-ம்தேதி 32-வது மாபெரும் கோவிட் தடுப்பூசி முகாம் 2900-க்கு அதிகமான இடங்களில் நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்

திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை (ஜூலை 24-ம்தேதி) 32-வது மாபெரும கோவிட் தடுப்பூசி முகாம் 2900-க்கு அதிகமான இடங்களில் நடைபெற உள்ளது. இம்முகாமில் இதுவரை கோவிட் தடுப்பூசி முதல் மற்றும் இரண்டாம் தவணை செலுத்தாமல் விடுபட்டவர்கள் மற்றும் முன்னெச்சரிக்கை தவணை கடந்தவர்களுக்கு மூன்றாவது தவணை தடுப்பூசி செலுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கோவிட்-19 நோய்த்தொற்றானது ஜனவரி மாதம் ஏற்பட்ட மூன்றாம் அலைக்குப்பிறகு குறைந்து வந்த நிலையில் கடந்த மூன்றுவாரங்களாக மீண்டும் அதிகரித்து தற்போது நாளொன்றுக்கு 2000- க்கும் அதிகமானோர் பாதிக்கப்படுகின்றனர். மேலும் திண்டுக்கல் மாவட்டத்திலும் கடந்த ஒருவாரமாக தொற்று அதிகரித்து தற்போது நாளொன்றுக்கு சராசரியாக 30 நபர்களுக்கு தொற்று ஏற்படுகிறது. ஜனவரி மாதம் ஏற்பட்ட மூன்றாம் அலையின் போது நோய்த்தொற்று அதிகரித்த போதும், கோவிட் தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தது. இதற்கு முக்கிய காரணம் பொதுமக்களின் ஒத்துழைப்புடன் கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டதே ஆகும்.

திண்டுக்கல் மாவட்டத்தில் 22.07.2022 வரை 12 வயதிற்கு மேற்பட்டவர்களில் முதல் தவணை தடுப்பூசி 1921688 (101.5மூ) நபர்களுக்கும், இரண்டாவது தவணை தடுப்பூசி 1789301 (94.5மூ)நபர்களுக்கும் செலுத்தப்பட்டுள்ளது. இத்துடன் 68302 நபர்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை செலுத்தப்பட்டுள்ளது. எனினும், திண்டுக்கல் மாவட்டத்தில் தற்போது வரை 2.7 லட்சம் நபர்கள் இரண்டாம் தவணைசெலுத்துவதற்குரியதவணைதேதிகடந்த பின்னும் தடுப்பூசிசெலுத்தாமல்உள்ளனர். மேலும் மாவட்டம் முழுவதும் 11.7 இலட்சம் நபர்கள் முன்னெச்சரிக்கை தவணைதடுப்பூசி (மூன்றாவது தவணை தடுப்பூசி) செலுத்துவதற்கான தவணை தேதி கடந்தும் செலுத்திக் கொள்ளாமல் உள்ளனர்.

கோவிட்-19 தடுப்பூசி முதல் மற்றும் இரண்டாம் தவணை செலுத்தாமல் விடுபட்ட நபர்களுக்காக நாளை (ஜூலை 24-ம்தேதி) தமிழ்நாடு முழுவதும் ஒரு இலட்சம் மெகா தடுப்பூசி முகாம்கள் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடத்தப்பட இருக்கிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் 24.07.2022 அன்று 2900-க்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட உள்ளது. இம்முகாமினை பயன்படுத்தி பொதுமக்கள் அனைவரும் தவறாமல் தங்களது தவணைக்குரிய தடுப்பூசி செலுத்திக் கொண்டு நோய்த் தொற்றின் கடுமையான பாதிப்புகளில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள இதன் மூலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். முக்கியமாக முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி (மூன்றாவது தவணை தடுப்பூசி) செலுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.