Close

DDU-GKY – 2018-19- Candidate Mobilization Camp

Publish Date : 20/06/2019

செ.வெ.எண்:-39/2019 நாள்:20.06.2019
திண்டுக்கல் மாவட்டம்

தீன் தயாள் உபாத்யாய கிராமின் கௌசல்ய யோஜனா திட்டத்தின் கீழ் கிராமப்புற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புடன் கூடிய திறன் வளர்ப்பு பயிற்சி வழங்கப்ப்பட்டு வருகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.டி.ஜி.வினய்.இ.ஆ.ப அவர்கள் தகவல்

மத்திய மற்றும் மாநில அரசின் பங்களிப்போடு தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்ட அலுவலகத்தின் கீழ் கிராமப்புற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புடன் கூடிய திறன் வளர்ப்பு பயிற்சியான தீன் தயாள் உபாத்யாய கிராமின் கௌசல்ய யோஜனா திட்டத்தின் கீழ் வழங்கப்ப்பட்டு வருகிறது. கிராமப்புறங்களில் உள்ள இளைஞர்கள் ஆண் / பெண் இருபாலருக்கும் 18 முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அதற்கு மேல் பட்டய படிப்பு, தொழில் கல்வி படித்தவர்களுக்கு ஆயத்த ஆடை தயாரித்தல், நூல் கோண் தயாரிப்பு, கணினி பயிற்சி, வீட்டு உபயோக மின்பொருட்கள் பழுதுபார்த்தல், இருசக்கர வாகனம் பழுதுநீக்கல், பொது சேவை உதவியாளர் (செவிலியர்) பயிற்சி, சி.என்.சி (லேத் ஆப்பரேட்டர்) இயந்திரம் இயக்குபவர், உடற்கல்வி உதவியாளர்;, விற்பனையாளர் பயிற்சி, உணவு மற்றும் குளிர்பான தொழில்நுட்பம், ஒப்பந்த அடிப்படையில் வணிக செயல்முறைகள் (பி.பி.ஒ), சேமிப்பு கிடங்கு மேற்பார்வையாளர், ஜீனியர் இன்ஸ்டருமென்ட்டேசன் டெக்னீசியன் மற்றும் அழகு கலை போன்ற இலவச பயிற்சிகளுக்கு, தங்குமிடம், உணவு மற்றும் அரசு சான்றிதழுடன் திறன் வளர்ப்பு பயிற்சியும், பயிற்சி முடிவில் 100மூ வேலைவாய்ப்பும் தனியார் நிறுவனங்கள் மூலம் வழங்கப்படவுள்ளது.
திறன் வளர்ப்பு பயிற்சி வழங்கும் நிறுவனங்கள் விபரங்கள் மற்றும் பயிற்சிகளின் விபரம் கீழ்க்கண்டவாறு வழங்கப்படுகிறது.

தகுதிகள்:

1. கிராமப்புறங்களில் வசிப்பவராக இருத்தல் வேண்டும்;.

2. 18 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்கள்.

3. சுய உதவிக்குழு உறுப்பினர் குடும்பத்தை சார்ந்தவர்கள்;

4. ஆண் / பெண் இருபாலரும்.

5. MGNREGS வேலை அட்டை உள்ள குடும்பத்தை சார்ந்தவர்கள்.

6. இலக்கு மக்கள் பட்டியல் (PIP) / வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள (BPL) குடும்பத்தை சார்ந்தவர்கள்.

எனவே, இப்பயிற்சியில் கலந்துகொள்ள விருப்பமுள்ள இளைஞர்கள் 24.06.2019 முதல் 28.06.2019 ஆம் தேதிக்குள் தங்களுக்கு தேவைப்படும் பயிற்சி விபரம் குறித்த தகவலுடன் கூடிய சுய விண்ணப்பம் மற்றும் படிப்பு சான்றிதழ்களின் நகல்களை இணைத்து சம்மந்தப்பட்ட ஊராட்சி அலுவலகங்களில் வழங்கி, இந்த திறன் வளர்ச்சி பயிற்சியில் கலந்து கொண்டு பயன்பெறாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.டி.ஜி.வினய், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.