DEAR – Drop Everything And Read
செ.வெ.எண்:-86/2025
நாள்:-21.08.2025
திண்டுக்கல் மாவட்டம்
புத்தகத் திருவிழாவை முன்னிட்டு திண்டுக்கல் SMBM மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ‘DEAR – Drop Everything And Read’ எனும் வாசிப்பு நிகழ்வு மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டத்தில் புத்தகத் திருவிழாவை முன்னிட்டு திண்டுக்கல் SMBM மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ‘DEAR – Drop Everything And Read’ எனும் வாசிப்பு நிகழ்வு மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (21.08.2025) நடைபெற்றது.
”DEAR-DROP EVERYTHING AND READ” எனும் உலகளாவிய நிகழ்வு நம் திண்டுக்கல்லில் புத்தகத் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்றுள்ளது. மாநகரம் முழுக்க குமரன் பூங்கா உள்ளிட்ட எட்டு மையங்களில் 40 கல்வி நிறுவனங்களின் பங்களிப்போடு நடைபெற்றது.
சிபிஎஸ்இ மற்றும் மெட்ரிக் கல்வியில் ஆங்கில வழியில் பயிலும் 1200-ற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு ஆங்கிலக் கதைகளை வாசித்தனர். அவர்களின் வாசிப்பின் போக்கை அறிந்து கொள்ளும் வகையில் ஆசிரியர்களின் சோதனையும் நடைபெற்றது. மாணவர்கள் இம்மாதிரியான வெளிவாசிப்பைத் தொடர வேண்டும். பெற்றோருடன் கூட்டு கலந்தாலோசிப்பில் ஈடுபட்டு பல்வேறு வகையான புத்தகங்களை வாசிக்க வேண்டும் ஆகஸ்ட் 28ல் தொடங்கும் புத்தகத் திருவிழாவிற்கு வருகை தருமாறு மாணவர்களை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் கேட்டுக்கொண்டார்.
பாடப்புத்தகத்தைத் தாண்டி பொது வெளியில் நிபந்தனைகளற்று கதையை வாசித்தது மாணவர்களுக்கு மிகவும் புத்துணர்வாக இருந்தது. அவர்கள் வாசித்த கதையை தங்களது வாழ்க்கையின் பல்வேறு நிகழ்வுகளோடு ஒப்பிட்டுப் பார்த்து தங்களது சிந்தனைத் திறனை வளர்த்துக் கொண்டனர். வாசிப்பு நிகழ்விற்காக கடமைக்காக மாணவர்கள் வாசிக்காது ஈடுபாட்டுடன் ஆர்வமாக வாசித்தனர். இந்நிகழ்விற்குப் பின் தொடர் வாசிப்பு மாணவர்களிடம் உறுதியாக ஏற்படும் என்ற நம்பிக்கை துளிர் விட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர்(தனியார் பள்ளிகள்) திரு.ஜான் பிரிட்டோ, எஸ்.எம்.பி.எம் பள்ளி முதல்வர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.