Close

District Employment Office Special renewal

Publish Date : 20/09/2021

செ.வெ.எண்:-35/2021

நாள்:20.09.2021

திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலமாகக் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பதிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன் இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தங்கள் கல்வித் தகுதியை தாங்கள் படித்த பள்ளிகள் வழியாக வேலைவாய்ப்புத் துறையின் https://tnvelaivaaippu.gov.in என்ற இணைய தளத்தில் பதிவு செய்து அடையாள அட்டை பெற தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால் மாணவர்களுக்கு ஏற்படும் போக்குவரத்து செலவு காலவிரயம் தேவையற்ற அலைச்சல், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் ஏற்படும் கூட்ட நெரிசல் ஆகியவை தவிர்க்கப்படுகிறது.

பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ் 17.09.2021 முதல் அக்டோபர் 1 வரை 15 நாட்களுக்கு ஒரே பதிவு மூப்பு தேதி வழங்கி, அவர்கள் படித்த பள்ளியிலேயே வேலைவாய்ப்பு அலுவலக இணையதளத்தில் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு/அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள், தனியார் பள்ளிகள் ஆகியவற்றில் இந்த வசதியை பயன்படுத்தி மாணவர்கள் வேலைவாய்ப்பு பதிவினை மேற்கொள்ளலாம்.

சி.பி.எஸ்.இ., மாணவர்கள் தங்கள் கல்வித் தகுதியை வேலைவாய்ப்புத் துறையின் இணையதளத்தில் தாங்களாகவே ஆன்லைனில் பதிவு செய்யலாம். ஏற்கனவே பத்தாம் வகுப்பு கல்வித் தகுதியை பதிவு செய்த மாணவர்கள் அந்த பதிவு அடையாள அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றுடன் மதிப்பெண் சான்று வழங்கப்படும் நாளில் தாங்கள் படித்த பள்ளியை அணுகி பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சியை கூடுதலாக பதிவு செய்து கொள்ளலாம்.

புதியதாக பதிவு செய்ய விரும்பும் மாணவர்கள் ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, ஜாதிச் சான்றிதழ் ஆகிய விபரங்களுடன் பள்ளிகளை அணுகி பதிவு மேற்கொள்ளலாம். இவ்வாறு திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் திரு.ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.