Close

Department of Agricultural and Marketing

Publish Date : 28/09/2021
.

செ.வெ.எண்:-54/2021

நாள்:-28.09.2021

திண்டுக்கல் மாவட்ட விவசாயிகளின் முன்னேற்றத்திற்காக மாவட்ட நிர்வாகம் எப்போதும் உறுதுணையாக இருக்கும் – சித்தையன்கோட்டை மஞ்சளாறு உபவடிநிலக்கோட்ட உழவர் உற்பத்தியாளர் நிறுவன முதலாமாண்டு பொதுகுழுக் கூட்டத்தில் – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

திண்டுக்கல் மாவட்டம் மஞ்சளாறு உபவடிநிலக்கோட்ட உழவர் உற்பத்தியாளர் நிறுவன முதலாமாண்டு பொதுக்குழு கூட்டம் தலைவர் யு.ரசூல்முகைதீன் தலைமையில் சித்தையன்கோட்டை மூக்கபிள்ளை பார்வதியம்மாள் திருமண மண்டபத்தில் இன்று (28.09.2021) நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:-

எந்த ஒரு செயலையும், கூட்டு முயற்சியாக செய்து, நாமெல்லாம் ஒருவரோடு, ஒருவர் கைகோர்த்து முன்னேற வேண்டும். இந்நிகழ்ச்சியானது கூட்டு முயற்சி என்ற அடிப்படையில் ஒரு உன்னத நோக்கத்தோடு நடைபெறுகிறது. கடந்த ஓராண்டு காலமாக உற்பத்தியாளர்கள் நிறுவனமானது மிகச்சிறப்பாக செயல்பட்டு வருவது பாராட்டுக்குறியது. கடந்த கொரோனா காலத்திலும், லாபம் அடைந்துள்ளது என்பது குறிப்பிடதக்க வெற்றியாகும். இந்த வெற்றி என்பது கண்டிப்பாக தொடர வேண்டும் என்பதை என்னால் நன்றாக உணரமுடிகிறது. ஒரு நிறுவனம் என்பது ஒரு தலைவர் எப்படியோ, அதைபோல்தான் எல்லாரும் இருப்பார்கள். இன்று A.ரசூல்முகைதீன் அவர்கள் குறிப்பிடுகையில் எந்த அளவிற்கு விருப்பத்துடன் இப்பணியினை எடுத்து செய்கிறார்கள் என்பதை அனைவரும் உணர வேண்டும். எந்த ஒரு காரியத்தையும் செய்வது என்பது மிகமிக கடினம். நிறைவேற்றுவது மிகவும் சுலபமாக இருக்காது. நமது ஊரில் உள்ள பிரச்சினைகள் என்னவென்றால், நாம் என்ன பணிகளை செய்தாலும், அதில் சின்னச்சின்ன பிரச்சனைகள் வந்துகொண்டே இருக்கும். நாம் அதை கடந்துதான் செல்ல வேண்டும். நாம் அனைவரும் சேர்ந்து இந்த மாதிரியான வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு, செய்யும தொழிலில் நன்மை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு, நாம் முன்னேறும் போது கண்டிப்பாக, மற்றவர்கள் நம்மைப்பார்த்து வியப்படைவார்கள், தமிழக அரசும் விவசாயிகளான நமக்கு என்றென்றும் உறுதுணையாக இருக்கும்.

எடுத்துகாட்டாக பார்த்தால் இது ஒரு புரட்சி என்று நான் நினைக்கின்றேன். அடுத்தடுத்த கால கட்டங்களில் இப்புரட்சியினை நாம் நல்ல முறையில் சிறப்பாக செய்து, லாபகரமாக ஈட்டி, கொண்டு வரும் போது உங்களுக்கு ஒரு வெற்றி கிடைக்கும். அதிகமான விசயங்கள் இந்த மாதிரி சிறியதாக ஆரம்பித்து, பெரிய இலக்குகள் நோக்கி சென்று வெற்றி கிடைத்துள்ளது. ஒருவர் நிலாவிற்கு செல்ல வேண்டும் என்றால், உடனடியாக நிலாவிற்கு செல்ல முடியாது. முதலாவதாக நிலாவில் ஒரு அடி எடுத்து வைத்திருப்பார். இந்த மாதிரி இந்நிகழ்ச்சி என்பது ஒரு அடி எடுத்து வைக்கும் நிகழ்ச்சியாக அமைந்துள்ளது. நீங்கள் நிலாவிற்கு சென்றடைவீர்கள் என்று எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். விவசாயிகளுக்கு தேவையான உதவிகளை செய்வதற்கு மாவட்ட நிர்வாகம் உறுதுணையாக இருக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். வேறு ஏதாவது சின்னச்சின்ன விசயங்கள் இருந்தால் மாவட்ட நிர்வாகம் அதனை செய்து கொடுக்க தயாராக இருக்கிறது. கண்டிப்பாக சீரக சம்பா அரிசிக்கு புவிசார் குறியீடு வாங்குவதற்கு அனைத்து முயற்சிகளையும் மாவட்ட நிர்வாகம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த நல்ல நிகழ்ச்சியில் கலந்து கொண்டமைக்கு உங்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

முன்னதாக, மஞ்சளாறு உபவடிநிலக்கோட்ட செயலாளர் திரு.S.K.முகமது அலி அவர்கள் வரவேற்புரையாற்றினர்.

இந்நிகழ்ச்சியில் இணை இயக்குநர் (வேளாண்மை) திரு.ளு.பாண்டித்துரை, துணை இயக்குநர் (தோட்டக்கலை) திரு.J.பெருமாள்சாமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) திரு.P.ரவிபாரதி, துணை இயக்குநர் (வேளாண் விற்பனை) திரு.S.ராஜா, துணை இயக்குநர் (மத்திய அரசு திட்டங்கள்) திருமதி C.அமலா, (உழவர் பயிற்சி நிலையம்) திருமதி P.விஜயராணி, திரு.S.வரதராஜன், K.பாலச்சந்திரன், P.மாரிமுத்து, திரு.வேல்முருகன், திருமதி P.உமா, ஊ.முருகானந்தவேல், R.பெருமாள், S.S.R.கிருஷ்ணா, முன்னாள் சித்தையன்கோட்டை பேரூராட்சி மன்றத்தலைவர் திருமதி M.ஹபிபா உட்பட பலர் கலந்து கொண்டனர்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.