Close

Development Engineers Meeting

Publish Date : 16/05/2022
.

செ.வெ.எண்:-25/2022

நாள்: 16.05.2022

திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், வளர்ச்சித் திட்டப் பணிகளை உரிய தரத்துடன், உரிய காலத்திற்குள் சிறப்பாக முடிக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக பல்வேறு அரசுத்துறை பொறியாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், வளர்ச்சித்திட்டப் பணிகளை உரிய தரத்துடன், உரிய காலத்திற்குள் சிறப்பாக முடிக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக பல்வேறு அரசுத்துறை பொறியாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் இன்று(16.05.2022) நடைபெற்றது. கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி திரு தினேஷ் குமார் இ.ஆ.ப. அவர்கள் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசியதாவது:-

முந்தைய காலத்தில் அரசுத்துறையில் கட்டப்பட்ட பல்வேறு பாலங்கள் பல்வேறு கட்டிடங்கள் பல நூற்றாண்டுகளை கடந்தும் இப்போதும் சிறப்பாக இருந்து வருகின்றன. அதுபோலவே நமது வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கான கட்டடங்கள் பாலங்கள் ஆகியவைகளின் கட்டுமானப் பணிகள் மிக சிறப்பாகவும் தரத்துடனும் செய்திட வேண்டும். குறிப்பாக மேல்நிலை குடிநீர்த்தேக்கத் தொட்டி கட்டும்போது கட்டுமானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டுமான முறைகள் அனைத்தையும் சிறப்பாக செய்திட வேண்டும். குறித்த காலத்திற்குள் பணிகளை முடிக்க வேண்டும். பொதுப்பணித்துறை கட்டடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வு தளங்கள் கண்டிப்பாக அமைக்கப்பட வேண்டும். கட்டுமான பணிகள் தொடர்பாக திடீர் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். திண்டுக்கல் மாவட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து குறித்த காலத்திற்குள் முடிக்க அனைத்துத் துறைகளைச் சார்ந்த பொறியாளர்கள் அலுவலர்கள் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பேசினார்.

இக்கூட்டத்தில், ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் திருமதி அனுராதா, பொதுப்பணித்துறை(கட்டடங்கள்), பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு, ஊராக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, நகராட்சிகள் துறை, பேரூராட்சிகள் துறை, குடிநீர் வடிகால் வாரியத் துறை, நெடுஞ்சாலைத்துறை உட்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த பொறியாளர்கள் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.