DIC-Addl capital subsidy
செ.வெ.எண்:-68/2025
நாள்:19.06.2025
திண்டுக்கல் மாவட்டம்
குறு நிறுவனத்திற்கான கூடுதல் முதலீட்டு மானிய திட்டத்தில் பயன்பெற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
தமிழ்நாடு அரசு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு வகையான மானிய உதவிகளை வழங்கி வருகிறது.
அதனைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கொள்கை 2021-ல் மூலதன மானியம் பெற விண்ணப்பிக்கும் தகுதிவாய்ந்த குறு உற்பத்தி நிறுவனங்களுக்கு மூலதன மானியத்துடன் கூடுதல் முதலீட்டு மானியம் (தகுதிவாய்ந்த இயந்திர தளவாடங்களின் மதிப்பில்) 10 சதவீதம் அதிகபட்ச மானியம் ரூ.5.00 இலட்சம் வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
தற்போது குறு உற்பத்தி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வந்த கூடுதல் முதலீட்டு மானியம் 10 சதவீதம் அதிகபட்ச மானியம் ரூ.5.00 இலட்சத்திலிருந்து அதிகபட்ச மானியம் ரூ.10.00 இலட்சமாக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
எனவே, புதியதாக துவங்கப்படும் மற்றும் ஏற்கனவே இயங்கி வரும் நிறுவனத்தின் விரிவாக்கத்திற்கும் அந்நிறுவனம் குறு உற்பத்தி நிறுவனமாக இருக்கும் பட்சத்தில் அந்நிறுவன உரிமையாளர்கள் இத்திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
இதுகுறித்து, மேலும் விவரங்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், சிட்கோ தொழிற்பேட்டை, திண்டுக்கல் அவர்களை நேரிலோ அல்லது 0451-2904215, 2471609 மற்றும் 8925533943 என்ற தொலைபேசி வாயிலாகவோ தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம். தகுதியுள்ளவர்கள் https://www.msmetamilnadu.tn.gov.in/incentives என்ற இணையதள முகவரியை தொடர்பு கொண்டு விண்ணப்பித்து பயன்பெறலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.