Close

DIC-Covid19 – Employment Generation Programme

Publish Date : 09/05/2023

செ.வெ.எண்:-38/2023

நாள்:-25.04.2023

திண்டுக்கல் மாவட்டத்தில், கோவிட் 19 தொற்று காரணமாக வெளிநாட்டில் வேலையிழந்து, தமிழகம் திரும்பிய தமிழர்களில் தொழில் தொடங்கிட விழைவோரை ஊக்குவிப்பதற்கான தமிழ்நாடு அரசு புலம்பெயர்ந்தோர் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (MEGP) செயல்படுத்தப்படவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

திண்டுங்கள் மாவட்டத்தில் கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறத்தில் உள்ள கோவிட் 19 தொற்று காரணமாக வெளிநாட்டில் வேலையிழந்து தமிழகம் திரும்பிய தமிழர்கள் பயன்பெறும் வகையில் சுய தொழில் தொடங்கி பொருளாதாரத்துடன் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்த வேண்டும் என்ற எண்ணத்தில், தமிழ்நாடு அரசு புலம்பெயர்ந்தோர் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்(MEGP) திண்டுக்கல் மாவட்ட தொழில் மைய அலுவலகம் மூலம் செயல்படுத்தப்படவுள்ளது.

தொழில் தொடங்க ஆர்வம் உள்ள புலம்பெயர்ந்தோர் குறைந்தபட்சம் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க மேண்டும். பொது பிரிவினருக்கு வயது வரம்பு 18 வயது முதல் 45 வயது வரையிலும், சிறப்புப் பிரிவினரான பெண்கள், ஆதிதிராவிட, பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் 55 வயது வரையிலும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் வேலைவாய்ப்பு விசாவுடன் 2 ஆண்டுகளுக்கு குறையாமல் வெளிநாட்டில் வேலை பார்த்திருக்க வேண்டும் மற்றும் 01.01.2020 அல்லது அதற்கு பிறகு வெளிநாட்டிலிருந்து தமிழகம் திரும்பியவராக இருக்க வேண்டும்.

இத்திட்டத்தில் உற்பத்தி தொழிலுக்கு ரூ.15 இலட்சமும், சேவை மற்றும் வணிக தொழில்களுக்கு ரூ.5 இலட்சமும், அதிகபட்ச திட்ட மதிப்பாக நிர்ணம் செய்யப்பட்டுள்ளது. திட்ட மதிப்பில் தொழில் முனைவோரின் பங்கீடாக 10 சதவீதம் தொகையை பொது பிரிவினரும், 5 சதவீதம் தொகையை சிறப்பு பிரிவினரும் செலுத்த வேண்டும். அரசின் மானியத் தொகை திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் அதிகபட்ச மானியத் தொகை ரூ.2.50 இலட்சம் வரை மானியமாக வழங்கப்படும்.

எனவே, திண்டுக்கல் மாவட்டத்தில் தொழில் தொடங்க ஆர்வமுள்ள புலம்பெயர்ந்தோர் இந்த வாய்ப்யை பயன்படுத்துதிக்கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு https://www.msmetamilnadu.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாகவோ, நேர்முக உதவியாளர் (பொது), மாவட்ட ஆட்சியர் அலுவலகம், திண்டுக்கல் மற்றும் பொது மேலாளர், மாவட்டத் தொழில் மையம் திண்டுக்கல் அவர்களை நேரிலே அல்லது 0451-2471609 / 2904215 என்ற அலுவலகத் தொலைபேசி வாயிலாகவோ தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.